Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
கஜகேசரி யோகத்தால் மே 17 முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு ஓஹோ-ன்னு இருக்கப் போகுது..
Jupiter Moon Make Gajakesari Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் நிகழும். அந்த கிரக சேர்க்கைகளால் சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகலாம்.
அந்த யோகங்களால் சிலர் நற்பலனையும், சில கெடுபலனையும் பெறலாம். அந்த வகையில் மே 17 ஆம் தேதி கஜகேசரி ராசி யோகம் உருவாகவுள்ளது. கஜகேசரி யோகமானது குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் நிகழ்வது. தற்போது குரு மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சந்திரன் மே 17 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் இரண்டரை நாட்கள் இருப்பார். மேஷ ராசியில் குரு, சந்திரன் சேர்வதால், கஜகேசரி யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது கஜகேசரி யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கஜகேசரி யோகம் என்றால் என்ன? எப்போது உருவாகும்?
ஜோதிடத்தில் கஜகேசரி யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். இந்த யோகமானது குருவும், சந்திரனும் ஒரே ராசியில் ஒன்றிணைந்து இருக்கும் போது உருவாகிறது. இந்த யோக காலத்தில் ஒருவரது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். செல்வம் பெருகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உருவாகும். இப்போது மேஷ ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை சிறப்பாக பாராட்டப்படும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதோடு திடீர் பண ஆதாயமும் கிடைத்து, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
கஜகேசரி யோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பல நற்பலனைகளை வழங்கவுள்ளது. குறிப்பாக வேலை செய்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். இக்காலத்தில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் விருப்பமான இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

