Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Jupiter Moon Conjunction Make Gajkesari Rajyog: ஜோதிடத்தின் படி, கிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக ராசியை மாற்றக்கூடியவர். இப்படி சந்திரன் வேகமாக ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அப்படி உருவாகும் யோகங்கள் 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சந்திரன் குரு பகவானுடன் இணைந்து பயணிக்கும் போது உருவாவது தான் கஜகேசரி ராஜயோகம். இந்த ராஜயோகம் சுப யோகம் என்பதால், சிலருக்கு இந்த யோகத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

இப்படிப்பட்ட கஜகேசரி ராஜயோகம் டிசம்பர் 21 ஆம் தேதி மேஷ ராசியில் குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகிறது. இந்த ராஜயோகம் அடுத்த இரண்டு நாட்கள் வரை நீடித்திருக்கும்.
இந்த மங்களகரமான ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். இப்போது மேஷ ராசியில் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகத்தால் நல்ல பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகத்தால், அடுத்த இரண்டு நாட்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் இக்காலத்தில் பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 10ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். தொழில் ரீதியாக நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டு சூழல் நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் உடன்பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நிதி நன்மைகளையும் பெறுவார்கள்.
முதலீடு செய்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் தந்தை மற்றும் குருவின் உதவியால் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications