Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குரு புதன் சேர்க்கை: இன்று முதல் அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Jupiter Mercury Conjunction In Aries 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில நேரங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கும். அவ்வாறு நிகழும் கிரக சேர்க்கைகளின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் கடந்த ஆண்டு முதலாக மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் மேஷ ராசியில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது 15 நாட்கள் வரை நீடித்திருக்கும்.

இந்த சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கவுள்ளது. அதோடு இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது குரு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபராக இருந்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 15 நாட்கள் அதிர்ஷ்டமாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications