Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-புதன் சேர்க்கை: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Jupiter Mercury Conjunction 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 26 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் மார்ச் 26-ல் நிகழும் புதன் பெயர்ச்சிக்கு பின் மேஷ ராசியில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இவ்விரு கிரகங்களும் நட்புணர்வு கொண்ட கிரகங்கள் என்பதால், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகிறது. இப்போது 2024 மார்ச் 26-ல் நிகழும் குரு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரக்கூடிய சில சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையைப பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைப்பதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் மற்றும் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றிகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். முக்கியமாக பணப் பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் புதிய வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதலித்து வந்தால், அந்த காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
