Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் நிகழும் குரு செவ்வாய் சேர்க்கை: ஜூனில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கபோகுது..
Jupiter Mars Conjunction In Taurus 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் இணைந்தும் பயணிக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும்.
அந்த வகையில் மங்களகரமான கிரகமான குரு பகவான் மே 01 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் கிரகங்களின் தளபதியான செவ்வாய் இந்த ரிஷப ராசிக்கு ஜூன் மாதத்தில் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது ரிஷப ராசியில் நிகழவுள்ள குரு செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்க நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எழுதியவர்கள் நல்ல செய்தியைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இக்காலத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். நீண்ட காலமாக பிரச்சனையில் இருந்த பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்கள் மிகப்பெரிய அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications