Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
12 ஆண்டுகளுக்கு பின் மேஷம் சென்றுள்ள குரு பகவான்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்..
Jupiter In Aries 2023: நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். ஒருவரது வாழ்வில் நடக்கும் அனைத்து நல்ல காரியங்களும் குரு பகவானின் அருள் இருந்தால் தான் நடக்கும்.
இந்த குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தனது சொந்த ராசியான மீன ராசியில் இருந்து, செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்குள் நுழைந்தார். 12 வருடத்திற்கு பின் மேஷ ராசியில் நுழைந்துள்ள குரு பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு குருவின் நிலையால் திடீர் செல்வம் கிடைப்பதோடு, தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது மேஷ ராசியில் உள்ள குருவால் தொழிலில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் நிலையால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். இக்காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி காண்பார்கள். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் நிலை மங்களகரமானதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் நிலை மற்றும் அருளால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். கூட்டு தொழிலைத் தொடங்க நினைப்பவர்கள், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். இக்காலத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இதனால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் குரு பகவான் உள்ர். இதனால் தொழிலில் நல்ல முன்னனேற்றமும், லாபமும் கிடைக்கும். திருமணமான ராசிக்காரர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவார்கள். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். ஊடகம், கலை, ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் குருவின் நிலையால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சுருக்கமாக கூற வேண்டுமானால், சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் நிலையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications