Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மீன ராசியில் குரு அஸ்தமனம்: ஏப்ரல் 27 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனையை சந்திக்க நேரிடும்...
ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, சில சமயங்களில் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். இப்படி கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மங்களகரமான கிரகமான குரு மார்ச் 28 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீன ராசியில் அஸ்தமனமானார்.
இந்த அஸ்தமன நிலையில் குரு பகவான் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இருந்து, பின் உதயமாவார். அஸ்தமன நிலையில் எந்த கிரகம் இருந்தாலும், அந்த கிரகம் வலுவிழந்து இருக்கும் மற்றும் அந்த கிரகத்தால் கிடைக்கும் நற்பலன்களும் தடைபடும்.

குருவின் அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது மீன ராசியில் அஸ்தமன நிலையில் உள்ள குருவால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் மிதுன ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பணிபுரிபவர்கள் மட்டுமின்றி, வியாபாரிகளும் இக்காலகட்டத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். இக்காலத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். கூட்டு வணிகம் செய்து வந்தால், இக்காலத்தில் சிறு விஷயங்களுக்காக பெரிய வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், உறவுகளில் பிரிவினைகள் ஏற்படக்கூடும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் அதிகமாக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலகட்டத்தல் கும்ப ராசிக்காரர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். எதை பேசினாலும், இக்காலத்தில் யோசித்து பேச வேண்டும். நண்பர்கள் அல்லது உறவினர்களுடனான உறவு மோசமடையும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தன்னம்பிக்கை சற்று குறையும். முதலீடுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications