Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மீன ராசியில் குரு அஸ்தமனமாவதால் இன்று முதல் ஏப்ரல் 27 வரை இந்த ராசிக்காரங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்...
Jupiter Combust In Pisces on 28 March 2023: வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு. இந்த குரு செல்வம், மரியாதை, பெண்ணின் கணவர், குழந்தைகள் மற்றும் கல்வி ஆகியவற்றைக் குறிக்கிறார். எனவே குருவின் நிலையில் அல்லது இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு ஆண்டு காலம் ஆகும்.
தற்போது குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு 2023 மார்ச் 28 ம் தேதி, அதாவது இன்று குரு பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகிறார். குரு அஸ்தமனம் ஒரு நல்ல நிகழ்வாக கருதப்படுவதில்லை. ஏனெனில் குரு அஸ்தமன நிலையில் இருக்கும் போது அவர் வலுவிழந்து இருப்பார். இதனால் ஒருவரது வாழ்வில் உள்ள மகிழ்ச்சி குறையக்கூடும். அனைத்து விஷயங்களிலும் தாமதத்தை காண நேரிடும். எந்த ஒரு சுப காரியமும் நடைபெறாது.

குரு பகவான் இந்த அஸ்தமன நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இருந்து, பின உதயமாவார். அதற்கு முன் ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறவுள்ளார். குருவின் இந்த அஸ்தமன நிலையானது அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது மீன ராசியில் அஸ்தமனமாகும் குருவால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தந்தையின் மகிழ்ச்சியில் குறைவு ஏற்படலாம். தேவையில்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்காது. பணியிடத்தில் வெற்றி காண மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இக்காலகட்டத்தில் உங்கள் முயற்சிகளுக்கான நற்பலன்கள் கிடைக்காது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் கலவையான பலன்களைப் பெறுவார்கள். அதில் ஒருபுறம் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும், மறுபுறம் நிதி ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் அதிக செலவுகளையும் சந்திக்க நேரிடும். இருப்பினும் தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்ய முயற்சிப்பார்கள். எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. யாரையும் இக்காலத்தில் நம்பாதீர்கள். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் எதிரிகளை நீங்கள் அடையாளம் காண்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு குறைவாகவே இருக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்காது. இக்கால கட்டத்தில் கோபப்படுவதைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உங்களின் சோம்பலும் சற்று அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் மாமியாருடன் எந்த விதமான பரிவர்த்தனைகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள். காதலிப்பவர்கள், காதல் தோல்வியால் மனம் வருத்தமடையக்கூடும். மாணவர்கள் படிப்பில் சில சிரமங்களை சந்திக்கலாம்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தைப் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் அலுவலகத்தில் உங்களுக்கு புதிய இலக்குகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அவர்களின் எதிரிகளை வெல்வார்கள். பங்கு சந்தையில் வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆனால் இக்கால கட்டத்தில் உடன்பிறந்தவர்களுடன் எவ்வித பிரச்சனையையும் செய்யாதீர்கள். பயணத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் உங்களின் உடைமைகள் காணாமல் போக வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் காதலிப்பவர்கள் இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். இக்காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் அதிகமாக கோபமடையக்கூடும். இக்காலத்தில் மற்றவர்களுடன் கடுமையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த முதலீடு செய்யும் முன்பும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் சில குடும்ப பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இக்காலத்தில் சற்று சோர்வாக இருப்பீர்கள். உங்களின் நற்பெயரைக் கெடுக்க உங்களின் எதிரிகள் முயற்சிப்பார்கள். இக்காலத்தில் உங்களின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலகட்டத்தில் தேவையில்லாத பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். மேலும் அந்த பயணங்களால் எவ்வித பலனும் இருக்காது. இக்காலத்தில் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் எவ்வித பண பரிவர்த்தனைகளையும் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் அது இருவருக்கும் இடையேயான உறவை முறித்துவிடும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மன கவலை இக்காலத்தில் சற்று அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் பேச்சு சற்று கடுமையாக இருக்கும். இந்த காலத்தில் எந்த விதமான பெரிய செலவுகளையும் செய்ய முயற்சிக்காதீர்கள். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் உடன் பணிபுரிபவர்களுடன் பெரிய சண்டை ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











