24 ஆண்டுகள் கழித்து குருவும், சுக்கிரனும் ஒன்றாக அஸ்தனமாகியிருப்பதால் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..

Jupiter And Venus Combust 2024 After 24 Years: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இவ்விரு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது குருவும், சுக்கிரனும் அஸ்தமன நிலையில் உள்ளனர். அதுவும் குரு பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். அதே சமயம் சுக்கிரன் செவ்வாயின் ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். இது தவிர, இந்த அஸ்தமன நிலையிலேயே ரிஷப ராசிக்குள் மே 7 ஆம் தேதி சுக்கிரன் நுழையவுள்ளார்.

Jupiter And Venus Combust 2024 After 24 Years These Zodiac Signs Should Be Careful In Tamil

இப்படி இவ்விரு கிரகங்களும் ஒன்றாக சுமார் 24 ஆண்டுகளுக்கு பின் அஸ்தமன நிலையில் ஒன்றாக பயணிக்கவுள்ளன. இந்த இரண்டு கிரகங்களும் அஸ்தமன நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது எந்த ராசிக்காரர்கள் குரு சுக்கிர அஸ்தமனத்தால் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

குருவும் சுக்கிரனும் அஸ்தமன நிலையில் இருப்பதால் ரிஷப ராசிக்காரர்கள் தொழில் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். எளிய வேலையை முடிக்க கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதோடு உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமாக இருக்கும்.

உடன் வேலை செய்வோரால் பல தடைகளை சந்திப்பீர்கள். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. நிறைய செலவுகளால் அவதிப்படுவீர்கள். பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களின் வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும்.

சிம்மம்

குரு சுக்கிர அஸ்தமனத்தால் சிம்ம ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். குழந்தைகளைப் பற்றிய கவலை சற்று அதிகரிக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் திருப்தி இல்லாத காரணத்தால் வேலையை விட வேண்டிய எண்ணம் தோன்றும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு நிதி இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்களால் பணத்தை சேமிக்க முடியாது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்

குருவும், சுக்கிரனும் அஸ்தமன நிலையில் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிறு வேலைகளைக் கூட முடிக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்காது. சிலர் பண இழப்பை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, May 7, 2024, 10:22 [IST]
Desktop Bottom Promotion