June Month Rasi Palan 2024: ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகுது...

June Month Rasi Palan 2024: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஜூன் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.

உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜூன் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூன் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2024 ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

June Month Rasi Palan 2024 June 2024 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்றத் திட்டமிடுபவர்களுக்கு மாதத்தின் நடுப்பகுதியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு வணிகம் செய்தால் கூட்டாளரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சற்று மோசமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே வேறுபாடுகள் அதிகரிக்கலாம். பண விஷயத்தில் இந்த மாதம் சுமாராக இருக்கும். பண வரவு இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிப்பதால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பட்ஜெட்டை மனதில் வைத்து செலவழித்தால் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! ஜூன் மாதம் பணிபுரிபவர்களுக்கு சவாலாக இருக்கும். சிறிய வேலைகளைக் கூட கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள். வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உங்கள் ரகசிய எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் இமேஜை கெடுக்க அவர்கள் முயற்சி செய்யலாம். வியாபாரிகளின் நிதி நிலை வலுவடையும். இம்மாதத்தில் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்தால், கோபம் மற்றும் மோதலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஜூன் நடுப்பகுதியில் நீங்கள் எந்த வியாபார முடிவை எடுத்தாலும், நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பண விஷயங்களில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். இம்மாதம் வங்கி இருப்பு அதிகரிக்கும். இருப்பினும் உங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது பட்ஜெட்டை கெடுத்துவிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இம்மாதத்தில் ஆரோக்கியம் தொடர்பான சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவசரமாக எந்த வேலையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! ஜூன் மாதம் உங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். தேவையற்ற கவலைகளால் சூழப்படுவீர்கள். உங்கள் வேலைகளில் சரியாக கவனம் செலுத்த முடியாது. ஆரோக்கியம் மற்றும் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் மாதத்தின் தொடக்கம் சாதகமாக இருக்காது. நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கடன் சுமையும் அதிகரிக்கலாம். மாதத்தின் நடுப்பகுதியில் உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து பண உதவி கிடைக்கும். இது தவிர, உங்களுக்கு புதிய வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு சில கடினமான பணிகள் ஒதுக்கப்படலாம். கடின உழைப்புடனும், தன்னம்பிக்கையுடனும் உங்கள் வேலையைச் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். குடும்பத்திற்கு போதுமான நேரம் கொடுக்க முடியாமல் போகலாம். குறிப்பாக உங்கள் துணையுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! ஜூன் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் காணப்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் சிறிய முடிவுகளை கூட மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். நிதி விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் வருமானம் அதிகரிக்கும். சொத்து, வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். பணிபுரிபவர்களின் மரியாதை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் சட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தால் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். மாத இறுதி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். லாபம் ஈட்டுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். நிதி நிலைமையில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் சில விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சில சந்தர்ப்பங்களில், கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். வேலையில் இருந்தால் மாதத் தொடக்கத்தில் உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள், ஆனால் விரைவில் நீங்கள் பெரும் நிவாரணம் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் மற்றும் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தையும் பெறலாம். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் தங்கள் முக்கிய வணிக முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வெளிநாட்டில் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால், அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஜூன் மாதம் மாணவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! ஜூன் மாதம் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது உங்கள் பணத்தை வீணாக்குவதுடன் உங்கள் சோர்வையும் அதிகரிக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் உங்கள் உறவினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். கோபத்திலும் அவசரத்திலும் எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் புதிய திட்டத்தில் வேலையைத் தொடங்க திட்டமிட்டால், உங்கள் பாதையில் பெரிய தடையை சந்திக்கலாம். இம்மாதத்தில் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் வாங்க விரும்பினால், தேவைக்கு அதிகமாக பணம் வாங்குவதைத் தவிர்க்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஜூன் மாதம் பணிபுரிபவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்கும். தேவைக்கு மேல் யாரையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுறது. வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தால் அவசரப்பட வேண்டாம். இந்த மாதம் நீங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உங்கள் குடும்பத்திற்கும் திருமண வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை பேண வேண்டும். உங்கள் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, விஷயத்தை அமைதியாகக் கையாள்வது நல்லது. பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்காது. இந்த காலகட்டத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தமான எந்த வேலையையும் மிகவும் கவனமாக செய்யுங்கள். இம்மாதம் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள், இல்லையெனில் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! ஜூன் மாதம் வியாபாரிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், கூட்டாளரிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கோபம் மற்றும் அவசரத்திற்கு பதிலாக அமைதியாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். சிறிய தவறுகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண விஷயத்தில் இம்மாதம் சுமாராக இருக்கும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் சில புதிய சவால்களை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த வகையான முதலீடு போன்றவற்றையும் தவிர்க்கவும். பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் நல்லது. பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையில்லாத கவலைகளை தவிர்த்துவிட்டு உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் எந்தப் பொறுப்பையும் கொடுத்தால், அதை ஏற்கத் தயங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை குறைவதையும் காணலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் சிரமங்கள் அதிகரிக்கும். உங்கள் பணம் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சற்று பலவீனமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! பணிபுரிபவர்களுக்கு ஜூன் மாதத்தின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றைப் பெறலாம். உங்களின் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் உங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வியாபாரம் வளரும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால், உங்கள் துணையுடன் நல்ல லாபம் ஈட்டலாம். உங்கள் பரஸ்பர புரிதல் மேம்படும். பண விஷயத்தில் மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், எதிர்காலத்தில் நீங்கள் எந்த நிதிச் சுமையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, நீங்கள் மிகவும் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். பரம்பரை சொத்துக்களை விற்க விரும்பினால், அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று பலவீனமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் சாதகமான பலன்களைப் பெற்றாலும், ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நேரத்தை மற்ற விஷயங்களில் வீணாக்காமல், உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். இம்மாதத்தில் அதிகப்படியான கோபம் உங்கள் இமேஜை கெடுத்துவிடும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் பங்குகளை அதிகரிக்க திட்டமிட்டிருந்தால், இந்த மாதம் சாதகமாக இருக்கும். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! ஜூன் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் செயல்திறனை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். இம்மாதத்தில் உங்கள் நடத்தை எல்லோரிடமும் நன்றாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். வியாபாரிகள் மாத தொடக்கத்தில் சில ஏற்ற இறக்கங்களைக் காணலாம். முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். நிதி விஷயங்களில் அதிக கவனம் தேவை. உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். இம்மாதத்தில் அவசர முடிவுகளை எடுத்து, பிரச்சனைகளை சந்திப்பீர்கள். திருமண வாழ்வில் சாதகமற்ற சூழ்நிலைகள் தோன்றும். தம்பதிகளுக்கு இடையே டென்சன் அதிகரிக்கலாம். சிறு சிறு விஷயங்களில் வாக்குவாதங்கள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Story first published: Wednesday, May 29, 2024, 16:58 [IST]
Desktop Bottom Promotion