Latest Updates
-
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்..
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல ரொம்பவும் அதிர்ஷ்டசாலிங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Monthly Finance Horoscope June 2024 In Tamil: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் நாம் நுழைந்துள்ளோம். இந்த ஜூன் மாதத்தில் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களைக் காணலாம்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை மற்றும் நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கலாம். இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமாக பிரச்சனைகளை நிறைந்ததாக இருக்கலாம். இன்றைய காலத்தில் பணம் மிகவும் இன்றியமையாதது. எனவே இப்போது ஜூன் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். மொத்தத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது சற்று பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களுக்கு எதிரியாகலாம். பணியிடத்தில் வேலையில் செய்யும் சிறு தவறுகள் பெரிய இழப்புக்களை சந்திக்க வைக்கும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளின் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதற்காக பெரிய சரிவு எதுவும் இருக்காது. நண்பர்களின் உதவியால் பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் நிதி ரீதியாக பெரிய பலன்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நிதி நன்மைகளைத் தரும் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்படலாம். நண்பர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் கூட்டாளருடன் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். ஷேர் மார்கெட்டில் இருப்பவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் பணியிடத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக வருமானத்தில் தடையை சந்திக்கலாம். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் லாபம் எதுவும் கிடைக்காது மற்றும் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் நிதி பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில பிரச்சனைகளால் வீட்டில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக பணப்பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் இம்மாதத்தில் நஷ்டத்தை சந்திப்பார்கள். இந்த மாதத்தில் எந்த முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தில் முதல் பாதியில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் காணக்கூடும். ஆனால் மாதத்தின் இரண்டாம் பாதியில் பணம் கைக்கு கிடைக்காமல் சிக்கும். இதன் விளைவாக பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் நிதி ரீதியாக நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு அதிக செலவுகளை செய்து பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் கவனம் செலுத்த முடியாததால், உங்கள் அலுவலக வேலை கெடலாம். வியாபாரிகள் இம்மாதத்தில் எந்த ஒரு மாற்றங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் வீட்டு செலவிற்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் அலுவலகத்தில் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும். இதனால் வேலையை இழக்க நேரிட்டு, பண பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். வியாபாரிகளின் நிதி நிலை இம்மாதத்தில் மோசமாக இருக்கும். நிதி நிலை மோசமாக இருப்பதால் வியாபாரத்தில் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இதனால் இதுவரை சந்தித்த பண பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் உயர்வு ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











