Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. உங்க ராசிக்கு எப்படி?
Career Horoscope For June 2024 In Tamil: 2024 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில் நுழையவுள்ளோம். கிரகங்களின் நிலைகளால் இம்மாதமானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதுவும் இம்மாதத்தின் தொடக்கத்திலேயே குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் இந்த ஜூன் மாதம் குறித்து பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள்.
ஜூன் மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறுவார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூன் மாதமான தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவால், பல முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், எந்த வேலையை தேர்ந்தெடுப்பது என்று குழப்பமடையக்கூடும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் கடினமாக உழைக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம், வேலையில் நல்ல வெற்றியைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதோடு உங்கள் மரியாதையும் அலுவலகத்தில் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூன் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். மேலும் உங்கள் நடத்தையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வேலையில் உங்களின் அர்ப்பணிப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் வெற்றிக்காக நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதன் விளைவாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக சுமாராக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வெற்றி பெறுவது என்பது சற்று சந்தேகம் தான். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் சில காலம் அலைய வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக சற்று மோசமாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ப வேலையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். மனச்சோர்வில் இருந்து விடுபட யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். படித்து முடித்த மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் வெற்றி பெற நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் நீங்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் சில முடிவுகள் உங்களின் கடின உழைப்பை அழித்துவிடும். வேலையில் சிறப்பான பலனைப் பெற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் முக்கியமான வேலையை வெற்றிகரமாக முடிக்க முடியும்.



Click it and Unblock the Notifications