Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் மோசமா இருக்கப்போகுது... பாத்து இருங்க..
Unlucky Zodiac Signs In June 2024: ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. பொதுவாக ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மாதமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும். இதற்கு கிரகங்களின் நிலைகள் தான் காரணம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதமானது சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கப் போகிறது என்று டாரட் வாசிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
அதுவும் 5 ராசிக்காரர்கள் வருகிற ஜூன் மாதத்தில் பலவிதமான சிரமங்களை எதிர்கொள்ள போகிறார்கள். முக்கியமாக நிதி பிரச்சனைகள் முதல் உறவுகளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு சவாலாக இருக்கும் மற்றும் அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் கடந்த கால காதலி/காதலன் இந்த மாதத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வரலாம். இதைத் தவிர்க்க கடந்த காலத்திலிருந்து தீர்க்கப்படாத சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் மற்றும் தங்களின் வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு வெளிப்படையாக பேச வேண்டும். கடந்த கால காதல் வாழ்க்கையின் தாக்கம் தற்போதைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க விநாயகருக்கு அருகம்புல்லைப் படைத்து வழிபடவேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் கடினமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பதோடு, நிதி சவால்களை சந்திக்க நேரிடும். பணி நீக்கங்கள் அல்லது பெரிய வேலை மாற்றங்களை காணலாம். இதன் விளைவாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இதைத் தவிர்க்க முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் பண பரிவர்த்தனைகளின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரச்சனைகளைத் தவிர்க்க, சிவலிங்கத்திற்கு ருத்ரா அபிஷேகம் செய்ய வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் தங்கள் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்க போதுமான ஓய்வை எடுக்க வேண்டும். இம்மாதத்தில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மோசமான தாக்கத்தைக் குறைக்க சூரியனை தினமும் பிராத்தனை செய்ய வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டும். ஜூன் மாதத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை சமாளிக்கும் சக்தியை பெற பசுவிற்கு கீரைகளை வழங்குங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் உறவுகளில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதைத் தவிர்க்க வாழ்க்கைத் துணையிடம் நேர்மையாக இருங்கள், எதையும் ரகசியமாக செய்யாதீர்கள். மொத்தத்தில் உறவுகளில் வெளிப்படையாக இருங்கள். இந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளைத் தவிர்க்க லட்சுமி தேவிக்கு சிவப்பு பூக்களை படைத்து வழிபட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications