Latest Updates
-
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
June Horoscope 2023: ஜூன் மாசம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது.. உங்க ராசி என்ன?
June Horoscope 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் ஜூன் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?
கீழே 12 ராசிக்காரர்களும் ஜூன் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூன் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது உங்களுக்கு அற்புதமாக இருக்கும். இம்மாதத்தில் தனிப்பட்ட அல்லது வேலை தொடர்பான குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்கள் வழியில் தடைகள் வந்தாலும், அதை மீறி முன்னேறுவீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்யாமல் இருந்தால் நல்லது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் உங்கள் உடல்நிலை குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூன் மாதம் உங்கள் தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களும் விரும்பிய வேலை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மாத இறுதியில், மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூன் மாதம் மாணவர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. படிப்பில் தடைகளை சந்திக்கக்கூடும். நிதி ரீதியாக, இம்மாதம் கலவையாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். இருப்பினும் முயற்சியை கைவிடக்கூடாது.
பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் பிஸியாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூன் மாதம் தொழில் தொடர்பான எந்த முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். பணிபுரிபவர்களின் சிரமங்கள் சற்று அதிகரிக்கும். கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. கூட்டு தொழில் செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பணத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் உங்களுக்கு கலவையாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். மாத இறுதியில், உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடைவதால் உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. சிக்கிய பணம் கிடைக்கலாம். மாதத்தின் நடுப்பகுதியில் புதிய வருமானத்தைப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு வெற்றியின் கதவுகள் திறக்கும், உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
வணிகர்கள் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட்டு எந்த ஒரு வேலையையும் செய்தால் நஷ்டம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூன் மாதம் உங்களுக்கு நிதி ரீதியாக சற்று கடினமாக இருக்கும். செலவுகள் திடீரென்று அதிகரிப்பதால், சிரமங்கள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த மாதத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். வெளியூர் சென்று வேலை செய்ய நினைத்தால் விரைவில் விருப்பம் நிறைவேறும். காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். தவறான புரிதல் வாழ்க்கைத் துணையுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூன் மாதம் உங்களுக்கு இனிமையாக இருக்கும். இம்மாதத்தில் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்காது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூன் மாதம் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடன் தகராறு ஏற்படலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்கள் பணியிடத்தில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள்.
மாதத்தின் நடுப்பகுதியில், வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் குடும்பத்திற்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலையை மாற்ற விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதி பிரச்சனைகளும் தீர்க்கப்படும். இம்மாதமானது வாழ்க்கைத் துணையுடன் மிகவும் நன்றாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதிகமாக சேமிக்க முடியும். முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இம்மாதம் சிறப்பாக இருக்காது. மாத இறுதியானது நன்றாக இருக்கும். சில நற்செய்திகளை பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை, இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பெரிய நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும் போது அவசரப்பட வேண்டாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது நீங்கள் பல சவால்களை எதிர்கொள்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் எதிர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட எந்தப் பொறுப்பும் உங்களிடமிருந்து திரும்பப் பெறப்படலாம்.
தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் பற்றாக்குறையால் பல முக்கியமான பணிகள் தடைபடலாம். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பழைய நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். பரம்பரை சொத்தை விற்க நினைத்தால், அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்வில் பிரச்சனைகளை வர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், போதுமான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











