Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
ஜூலை மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப ஆபத்தான மாதமாக இருக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு புதிய மாதமும் நமக்கு அந்த மாதத்தின் கிரக நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். ஏனெனில் ஒரு புதிய மாதத்தின் தொடக்கம் என்பது ஒவ்வொரு இராசி அடையாளத்தையும் தனித்தனியாக பாதிக்கும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கிடையில் புதிய பரிமாற்றங்களைக் குறிக்கிறது.
கிரக நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்கும் ஒரு புதிய மாதம் சில வாய்ப்புகளையும், சில இன்னல்களையும் அளிக்கும். அந்த வகையில் வரப்போகிற ஜூலை மாதம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாகவும், சில ராசிக்காரர்களுக்கு ஆபத்தான மாதமாகவும் இருக்கப்போகிறது. ஜூலை மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் இந்த மாதம் முழுவதும் சிம்ம ராசியில் இருப்பார், உங்கள் கோபத்தின் வெளிப்பாடு உங்களின் வாய்ப்புகளை வீணாக்கலாம். வியாழன், பிற்போக்கு சனி மற்றும் செவ்வாய் கிரகத்தில் ராகுவின் அம்சங்கள் சூழ்நிலையை மிகவும் சிக்கலாக்குகின்றன, இது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கிறது.
ஜூலை 13 ஆம் தேதி புதன் உதயமானது, உங்கள் போராட்டங்களின் தீவிரத்தை அதிகரிக்கலாம். சூரியன் ஜூலை 17 ஆம் தேதி தனது ராசியை மாற்றி, உங்கள் நான்காவது வீட்டில், நீர் ராசியான கடக ராசியில் நுழைந்து, ஒரு மங்களகரமான 'திரிகோண-கேந்திர ராஜயோகம்' மற்றும் 'புதாதித்ய யோகம்' ஆகியவற்றை உருவாக்கி, உங்கள் முயற்சிகளுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கலாம். அதுவரை நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியான வியாழன் உங்கள் ராசியிலேயே, கணிக்க முடியாத கிரகமான ராகுவுடன் இருப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், இதனால் தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம்.
சிம்மம்
ஜூலை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு கலவையான மாதமாக இருக்கும், குறிப்பாக இதனை மாதத்தின் முதல் பத்து மற்றும் கடைசி எட்டு நாட்களில் நீங்கள் நன்றாக உணருவீர்கள். உங்களிடம் ஏதேனும் திட்டம் இருந்தால், அதை ஜூலை 9 ஆம் தேதிக்குள் முடிக்க முயற்சிக்கவும், இல்லையெனில் உங்களின் வேலை முடிக்கப்படமால் போகலாம்.
உங்களின் திறமை உங்களை கைவிட்டுவிடுவதாக சில சமயங்களில் நீங்கள் உணரலாம். உங்களின் நம்பிக்கையில் இழக்காதீர்கள், இது தற்காலிக பின்னடைவுதான். விரைவில் உங்களின் திறமைகள் மூலம் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். மாத இறுதியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கன்னி
ஜூலை மாதம் உங்களை சோதிக்கும் காலகட்டமாக இருக்கும், இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூலை 10 மற்றும் ஜூலை 27 க்கு இடையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
உங்கள் துணை உங்கள் மீது குற்றம் சாட்டலாம், எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் செயல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஜூலை 22-க்கு பிறகு உங்களின் பிரச்சினைகள் தீவிரத்தை அடையலாம். மாதத்தின் இறுதி வாரம் உங்களின் சிக்கல்கள் கொஞ்சம்கொஞ்சமாக குறையத் தொடங்கும்.
மீனம்
உங்கள் ராசியில் சனி மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டு கிரகங்கள் பின்னோக்கிச் செல்வதால் வாழ்க்கையின் வேகம் இந்த மாதம் மெதுவாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போக வாய்ப்புள்ளது. ஜூலை 22 அன்று, சுக்கிரன் அவர்களுடன் இணைவதால், உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மாதத்தின் கடைசி வாரம் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
உங்கள் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்யுங்கள், இது உங்களின் ஆபத்துகளை குறைக்கலாம். உங்கள் சகப்பணியாளர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் சுமூகமான உறவை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் தீவிர மனஅழுத்தத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications
