ஜூலை மாசம் இந்த 6 ராசிக்காரங்க நிறைய பண பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. கவனமா செலவு பண்ணுங்க..

July 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்களால் தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதியான பலன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் ஜூலை மாதத்தில் நுழைந்துவிட்டோம்.

இந்த ஜூலை மாதத்தில் 5 கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக மாதத்தின் முதன் பாதியிலேயே பெரும்பாலான கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இரண்டாம் பாதியில் சில கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குகின்றன.

July 2023: These Zodiac Signs Will Face Financial Challenges In Tamil

இப்படி ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களையும், சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும் பெறலாம். முக்கியமாக சில ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

இப்போது ஜூலை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனையில் சிக்கி தவிக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

ஜூலை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரிதியாக மிகவும் கடினமாக இருக்கும். ராகுவும், குருவும் 12 ஆவது வீட்டில் சேர்ந்திருப்பதால், செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால், உங்களின் பட்ஜெட் பாழாகலாம். வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.

கடகம்

ஜூலை மாதத்தில் கடக ராசியின் சாதகமற்ற நிலையில் ராகு, குருவின் சேர்ந்துள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்சனைகள் அதிகம் வரும். திரென்று செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் சேமிப்புகள் அனைத்தும் கரையும். கூடுதலாக, இம்மாதத்தில் வேலை தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டு, அதனால் பண இழப்புக்களும் ஏற்படலாம். ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதை இம்மாதத்தில் செய்ய வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத செலவுகளை அதிகம் செய்வதால், பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த மாதத்தில் கடன் வாங்கும் வாய்ப்புக்களும் உருவாகும். பணத்தை சேமிப்பது இந்த மாதத்தில் சிரமமாக இருக்கும். ஏன், சேமிக்க முடியாமல் கூட போகலாம். வியாபாரிகளுக்கு இம்மாதம் கடினமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோசமானதாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டை மீறி செலவுகள் அதிகரிக்கும். ஆனால் இந்த மாதத்தில் எந்த கடனையும் வாங்கிவிடாதீர்கள். இல்லாவிட்டால், அந்த கடனை உங்களால் அடைக்க முடியாமல் போகும். சனியின் மோசமான நிலையால் குடும்ப செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த மாதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமானது கலவையான பலன்களைத் தருவதாக இருக்கும். இந்த மாதத்தில் சில பண ஆதாயங்களைப் பெற்றாலும், பணத்தை சேமிக்க முடியாது. பட்ஜெட்டை பராமரிப்பது சவாலானதாக இருக்கும் மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதத்தில் எந்த ஒரு முக்கியமான நிதி முடிவுகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால், அது இழப்புக்களை ஏற்படுத்தும்.

கும்பம்

கும்ப ராசியில் கேது மற்றும் சனி சாதகமற்ற நிலையில் ஜூலை மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும், செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு நிலையான நிதி நிலையை பராமரிப்பதில் தடைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் பட்ஜெட் போடும் போது, சேமிப்பு மற்றும் செலவுகளை கவனமாக திட்டமிட வேண்டும். கவனமாக இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, July 4, 2023, 9:44 [IST]
Desktop Bottom Promotion