Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
July Horoscope 2023: ஜூலை மாசம் இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும்...
July 2023 Monthly Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் ஜூலை மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?
கீழே 12 ராசிக்காரர்களும் ஜூலை மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூலை மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 ஜூலை மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது கலவையான பலன்களைத் தரும். தொழில் ரீதியாக சற்று கவனமாக இருக்க வேண்டும். பல புதிய சவால்களை சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது.
நிதி நிலை சிறப்பாக இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருங்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது தொழில் ரீதியாக இனிமையாக இருக்கும். கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை கொடுப்பார்கள்.
திருமணமானவர்களுக்கு இந்த மாதம் கடினமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பரஸ்பர புரிதல் குறைபாடு இருக்கும். தேவையற்ற விஷயங்களில் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. வெளிநாடு சென்று வேலை செய்யும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இம்மாதத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
நிதி ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டு சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் கலவையானதாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது பணிபுரிபவர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் கூட வரலாம். தொழிலதிபர்கள் கடுமையான போட்டியை சந்திக்கக்கூடும்.
எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றமடைவீர்கள். வீட்டின் சூழல் சற்று பதட்டமாக இருக்கும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறு கவனக்குறைவு பிரச்சனைகளை தீவிரமாக்கிவிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். நிதி ரீதியாக இம்மாதம் நன்றாக இருக்கும். தேவையில்லாத செலவுகளை செய்யாமல் இருந்தாலே போதும்.
சேமிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சற்று கடினமாக இருக்கும். வணிகர்கள் விரும்பிய லாபத்தைப் பெறக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நடத்த உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இம்மாதத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது பணத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. பணம் சம்பாதிக்க நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும். அன்றாட செலவுகளை செய்வதிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
பணிபுரிபவர்களுக்கு மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்காது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்தை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்களுக்கு இந்த மாதம் சாதாரணமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்காது. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளை செய்யக்கூடும். இந்த தவறுகளை தவிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், உங்களின் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். வீட்டில் சண்டைகளை சந்திக்கக்கூடும். மாத இறுதியில் மருத்துவ செலவுகளை அதிகம் செய்ய வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அலுவலகத்தில் தங்கள் திறமையைக் காட்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் சில முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பீர்கள்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் சிறப்பாக இருக்கும். பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நிதி முயற்சிகள் வெற்றியடையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். இருந்தாலும், அதிகரிக்கும் செலவால் தினசரி செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். கணவன் மனைவியுடனான உறவில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏன் பிரிவினையும் ஏற்படலாம்.
பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் கலவையானதாக இருக்கும். இம்மாதத்தில் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். அதிக மன அழுத்தத்தால், ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இம்மாதம் கலவையானதாக இருக்கும்.
இம்மாதத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இம்மாதத்தில் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். திருமணமாகாதவர்கள் வாழ்க்கைத் துணையைப் பெற இன்னும் காத்திருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. வேலையை மாற்ற நினைப்பவர்கள், அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபர்கள் நிதி இழப்பை சந்தக்க வாய்ப்புள்ளது. இம்மாதத்தல் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
வாக்குவாதம் வீட்டில் நடந்தால் அமைதியாக இருங்கள். இம்மாதத்தில் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை இயல்பை விட நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











