Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. இந்த ஜனவரி மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
January 2024 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2024 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2024 ஜனவரி மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த ஜனவரி மாதத்தில் தங்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக இந்த மாதம் சாதகமாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் மாத இறுதியில், மனம் சற்று அமைதியின்றி இருக்கும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதமானது காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திட்டங்களில் சில ஏமாற்றங்களைக் காண்பீர்கள். நிதி ரீதியாக, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். அதிகமாக செலவு செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், மாத இறுதியில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜனவரி மாதத்தில் தங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இவர்களின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படும். காதல் வாழ்க்கையில் ரொமான்ஸ் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையேயான உறவு வலுபெறும். நிதி நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பின் அடிப்படையில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதத்தில் காதல் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நிதி ரீதியாக இந்த மாதம் சாதகமாக இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் இந்த மாத இறுதியில் ஈகோ மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜனவரி மாதத்தில் கவனமாக இருந்தால் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். நிதி ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும் மற்றும் பண வரவும் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் ஷாப்பிங்கிற்கு செலவுகளை செய்யக்கூடும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாத இறுதியில் எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் பொறுமையுடன் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜனவரி மாதத்தில் தங்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இம்மாத தொடக்கத்தில் உங்களின் திட்டங்களால் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிதி ரீதியாக, எந்த ஒரு முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், அதை நன்கு சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிது. அப்படி எடுத்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிலர் மாத இறுதியில் நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜனவரி மாதத்தில் தங்கள் திட்டங்களால் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். காதல் வாழ்க்கை சாதகமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்புக்கள் அமையும். நிதி விஷயங்களில் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். இம்மாத இறுதியில் பேச்சு வார்த்தை மூலம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முயற்சித்தால், நல்ல முடிவுகளைப் பெறலாம்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜனவரி மாதத்தில் தங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். முக்கியமாக இந்த மாத இறுதியில் கடின உழைப்புடன், விரைவாக முடிவுகளை எடுக்கும் திறனால் முன்னேற்ற பாதைகள் திறக்கப்படும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் திட்டங்கள் வெற்றி பாதைக்கு வழிவகுக்கும். காதல் வாழ்க்கை சற்று அமைதியிழந்து இருக்கும். நிதி ரீதியாக படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். மாத இறுதியில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications