Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
30 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தி அன்று உருவாகும் சுப யோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரர்கள்!
Janmashtami 2023: இந்து மதத்தில் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் பிரபலமான ஒரு பண்டிகை. பகவான் கிருஷ்ணர் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியானது ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி அன்று வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியானது செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதியில் முடிவடைகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாட்களில் சர்வார்த்த மற்றும் சித்தி ஆகிய மங்களகரமான யோகங்கள் மட்டுமின்றி, சந்திரன் ரிஷப ராசியிலும், ரோகிணி நட்சத்திரமும் வருகிறது.

30 ஆண்டுகளுக்கு பின் இம்மாதிரியான நிகழ்வு நிகழ்கிறது. ஜோதிடத்தின் படி, இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் பண வரவோடு, அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திடீர் பண வரவைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். சொந்தமாக தொழில் செய்பவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கிருஷ்ணரின் அருளால் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். முக்கியாக இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியானது மிகவும் அற்புதமான பலன்களை வழங்கும். குறிப்பாக வாழ்வாதாரங்கள் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடைபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மிகவும் முக்கியமான ஒரு பெரிய முடிவை எடுப்பீர்கள். அந்த முடிவு நற்பலனை வழங்குவதாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்துடன், முன்னேற்றத்தையும் காண்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியானது மிகவும் அருமையாக இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கும். லட்சியங்கள் நிறைவேறக்கூடும். வியாபாரிகள் இக்காலத்தில் கடன் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறக்கூடும். ஆனால் தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications