Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Happy Birthday Vijay: நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா? ஷாக் ஆகாம படிச்சு பாருங்க...
Happy Birthday Actor Vijay: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் அவர்கள் இன்று தனது 51 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் சினிமாவின் மீதுள்ள காதலால் திரையுலகில் சுமார் 3 தசாப்தங்களுக்கும் மேலாக பயணித்து வருகிறார். இதுவரை இவர் 68-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து, ஒரு வெற்றி நாயகனாக உலா வருகிறார்.
தளபதி விஜய் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர், தமிழ் சினிமாவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நடிகர் விஜய் 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி சென்னையில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பின்னணிப் பாடகியான ஷோபா சந்திரசேகர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

இவர் தனது 10 வயதில் திரையுலகில் காலடி பதித்தார். முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் தனது 18 வயதில் விஜய் "நாளைய தீர்ப்பு" என்னும் திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். பின்பு 1996-களில் ரொமான்டிக் கலந்த காமெடி படங்களில் நடித்து, ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
2004 ஆம் ஆண்டு வெளிவந்த இவர் நடித்த கில்லி என்னும் திரைப்படம் சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதன் பின் இவரது ஒவ்வொரு படமும் கோடிகளை வசூல் செய்தது. வெற்றிகரமான நடிகராக திரையுலகில் விஜய் பயணித்து வந்தார். இந்நிலையில் விஜய் தனது திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியலில் முழுவதுமாக ஈடுபடப் போவதாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.
அதுவும் இந்த அறிவிப்பை 2024 ஆம் ஆண்டு வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்னும் திரைபடத்தின் போது வெளியிட்டார். மேலும் இவரது கடைசி திரைப்படமாக "ஜன நாயகன்" இருக்கும் என்றும், இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?
இந்தியத் திரைப்படத் துறையில் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்களுள் தளபதி விஜய்யும் ஒருவர் ஆவார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஒரு படத்திற்கு மட்டும் சுமார் 100-120 கோடி சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. அதோடு திரைப்பட வருமானத்துடன் கூடுதலாக, நடிகர் ஆண்டுதோறும் பிராண்ட் விளம்பரங்களுக்காக ரூ.10 கோடி வசூலிக்கிறார்.
நடிகர் விஜய் சென்னையில் நீலாங்கரையில் உள்ள காசுவாரினா டிரைவில் அமைந்துள்ள ஒரு ஆடம்பரமான பீச் ஹவுசை சொந்தமாக வைஙத்துள்ளார். இந்த ஆடம்பரமான வீடு ஹாலிவுட் ஐகான் டாம் குரூஸின் புகழ்பெற்ற பீச் ஹவுசால் ஈர்க்கப்பட்டது.
இது தவிர நடிகர் விஜய்க்கு கார்களின் மீது அலாதியான பிரியம் உள்ளது. இவரிடம் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்; பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6; ஆடி ஏ8 எல்; ரூ.65 லட்சம் விலையுள்ள ரேஞ்ச் ரோவர் எவோக்; ரூ.74 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு மஸ்டாங்; வால்வோ எக்ஸ்சி90 மற்றும் ரூ.87 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ உள்ளிட்ட ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











