Latest Updates
-
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜ்-க்கு மேல இந்த 7 பொருட்களை வெக்காதீங்க..
இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலுமே ஃப்ரிட்ஜ் என்னும் குளிர்சாதன பெட்டி உள்ளது. குளிர்சாதன பெட்டியானது உணவுகளை விரைவில் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்படிப்பட்ட குளிர்சாதன பெட்டியில் எப்படி ஒருசில பொருட்களை வைக்கக்கூடாதோ, அதேப் போல் அந்த குளிர்சாதன பெட்டியின் மேலே ஒருசில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நிறைய பேரின் வீட்டில் குளிர்சாதன பெட்டியின் மேல் பகுதி ஒரு டேபிள் போன்று பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இதன் மேல் தான் பல முக்கியமான பொருட்களை வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. எப்போதும் குளிர்சாதன பெட்டியானது நல்ல காற்றோட்டமான பகுதியில் இருக்க வேண்டும். முக்கியமாக அதன் பக்கவாட்டு பகுதி மற்றும் மேற்பகுதி எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டியின் மேலே பொருட்களை வைத்தால், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளிவரும் வெப்பம் வெளியே செல்ல முடியாமல், ஒரு கட்டத்தில் தீவிபத்தை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சரி, குளிர்சாதன பெட்டியின் மேல் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். கீழே எந்த மாதிரியான பொருட்களை ஃப்ரிட்ஜ் மேலே வைக்கக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. கண்ணாடி அல்லது பீங்கான் பொருட்கள்
ஃப்ரிட்ஜ்ஜின் மேல் எப்போதும் கண்ணாடி பொருட்கள் அல்லது எளிதில் உடையக்கூடிய பீங்கான் போன்ற எந்த பொருட்களையுமே வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், உங்களை அறியாமலேயே ஃப்ரிட்ஜ்ஜை திறக்கும் போது, அந்த பொருள் கீழே விழுந்து உடைய வாய்ப்புள்ளது. எனவே கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை மேலே வைக்காதீர்கள்.
2. காய்கறிகள்
உருளைக்கிழங்கு, பூண்டு, தர்பூசணி போன்ற குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை எப்படி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாதோ, அதேப் போல் ஃப்ரிட்ஜ்ஜிற்கு மேலேயும் வைக்கக்கூடாது. ஏனெனில் ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து வெளியிடப்படும் வெப்பம் அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு தீங்கை விளைவிக்கும்.
3. வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள்
வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களையும் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைக்கக்கூடாது. இவற்றில் சிறு கசிவு ஏற்பட்டாலும், அது ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள வாயுடன் கலந்து, சில சமயங்களில் ஃப்ரிட்ஜ்ஜை வெடிக்க வைக்கலாம். எனவே இந்த தவறை எப்போதும் செய்யாதீர்கள்.
4. மதுபானங்கள்
ஒயின் மற்றும் பிற மது பானங்களை எப்போதும் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். ஃப்ட்ரிஜ்ஜிற்கு மேல் வெப்பமாக இருப்பதால், இங்கு வைத்தால், மதுபானத்தின் நிறம், சுவை, வாசனை போன்றவை மாறி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
5. பிற எலக்ட்ரானிக் பொருட்கள்
ஃப்ரிட்ஜ் ஒரு எலக்ட்ரானிக் பொருள். அந்த பொருளின் மீது மிக்ஸி, ஜூசர், டோஸ்டர் போன்ற மற்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஒருவேளை கைத்தவறினால் கூட, அது கீழே விழுந்து உடைந்துவிடக்கூடும். எனவே இந்த மாதிரியான பொருட்களையும் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைக்கக்கூடாது.
6. மருந்துகள்
மருந்துகள் எப்போதும் சற்று குளிர்ச்சியான வெப்பநிலையில் 15 டிகிரி முதல் 25 டிகிரி வெப்பநிலையில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மருந்துகளை வெப்பத்தை வெளியிடும் ஃப்ட்ரிஜ்ஜின் மேல் வைத்தால், அதிலிருந்து வெளியிடப்படும் வெப்பம் மருந்துகளின் தன்மையை பாதித்துவிடும். எனவே எப்போதும் மருந்துகளை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைக்காதீர்கள்.
7. அலங்கார பொருட்கள்
வீட்டை அழகாக வைத்துக் கொள்ள செயற்கை செடிகள், சிலைகள் அல்லது போட்டோ ப்ரேம்கள் போன்ற ஒருசில பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கும். ஆனால் இந்த பொருட்களை எவற்றையும் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications