Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
IPL 2023: சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்களின் மனைவி/காதலியை பாத்திருக்கீங்களா? இங்க பாருங்க..
IPL 2023: தற்போது 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் போட்டியானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றது. இந்த ஐபிஎல்-ல் உள்ள ஒவ்வொரு அணியிலும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் உள்ளார்கள். ஏன், நமது இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களே ஒவ்வொரு அணியிலும் பிரிந்து உள்ளார்கள்.
ஐபிஎல்-லில் உள்ள அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த அணியின் கேப்டன் டோனி ஆவார். டோனி சென்னை அணியின் கேப்டன் ஆன பின், சென்னை மக்கள் இவரை நம் வீட்டைச் சேர்ந்த ஒருவராகவே கருத ஆரம்பித்துவிட்டனர். மேலும் இவருக்கு தல என்ற ஒரு செல்ல பெயரையும் வைத்து அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இப்படிப்பட்ட சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் மாறுவார்கள்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியில் உள்ள சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை நாம் இதுவரை கண்டிருப்போம். ஆனால் அவர்களது மனைவி அல்லது காதலியை கண்டிருக்கமாட்டோம். இன்று சிஎஸ்கே அணி, பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. இப்போது சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்களின் அழகான மனைவி அல்லது காதலியைக் காண்போம்.
ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad)
ருதுராஜ் கெய்க்வாட் நல்ல திறமையான பேட்ஸ்மேன் ஆவார். இவர் சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் .இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் இவருக்கு காதலி உள்ளார். இவரது காதலியின் பெயர் உத்கர்ஷா. ருதுராஜ் பெரும்பாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளிகாட்ட விரும்புவதில்லை மற்றும் இவர் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாகவும் இருக்கமாட்டார்.
எம்எஸ் தோனி (MS Dhoni)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. இவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உள்ள வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராவார். எம்எஸ் தோனி ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்து சிஎஸ்கே-வின் கேப்டனா இருந்து வருகிறார். எம்எஸ் தோனியைப் போன்றே, அவரது மனைவி சாக்ஷி தோனியையும் பலரும் அறிவோம். சாக்ஷி தோனி சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் மற்றும் இவர் அடிக்கடி கணவர் தோனி மற்றும் மகள் ஜிவாவுடனான போட்டோக்களை பகிர்ந்து வருவார்.
பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes)
பென் ஸ்டோக்ஸ் ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் இவர் ஒரு ஆல் ரவுண்டர். பென் ஸ்டோக்ஸின் மனைவி கிளேர் ராட்க்ளிஃப் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். கிளேர் ராட்க்ளிஃப் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார் மற்றும் அடிக்கடி பென்னுடன் எடுத்த போட்டோக்களை பகிர்ந்தும் வருவார்.
அம்பதி ராயுடு (Ambati Rayudu)
அம்பதி ராயுடு ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்-கீப்பர் ஆவார். அம்பதி ராயுடுவின் மனைவியின் பெயர் சென்னுபள்ளி வித்யா. இவர் ஒரு இல்லத்தரசி. சென்னுபள்ளி வித்யா சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கமாட்டார்.
ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja)
ரவீந்திர ஜடேஜா ஃபிட்டான மற்றும் மிகவும் பிரபலமான இந்திய அணி வீரர் ஆவார். இவர் ஒரு ஆல்-ரவுண்டர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா அரசியல் தலைவரான ரிபாவா சோலங்கியை திருமணம் செய்துள்ளார். இவர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தவர். ரிபாவா சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார் மற்றும் அடிக்கடி கணவர் ஜடேஜா மற்றும் மகள் நித்யானாவுடன் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து வருவார்.
டெவோன் கான்வே (Devon Conway)
டெவான் கான்வே ஒரு நியூசிலாந்து வீரர் ஆவார். இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். இவர் 2022 ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே-வுக்காக விளையாடி வருகிறார். டெவோன் கான்வே கிம் வாட்சன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் ஒரு ஆசிரியர். கிம் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார் மற்றும் அடிக்கடி கணவருடன் சேர்ந்து போட்டோக்களை எடுத்து பகிர்ந்து கொள்வார்.
மொயீன் அலி (Moeen Ali)
மொயீன் அலி ஒரு இங்கிலாந்து வீரர் ஆவார். இவர் ஒரு ஆல்ரவுண்டர் ஆவார். இவர் 2021 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். மொயீன் அலி ஃபிரோசா ஹொசைனை மணந்துள்ளார். ஃபிரோசா ஒரு நர்ஸ். இவர் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பதில்லை.



Click it and Unblock the Notifications






