Latest Updates
-
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட
International Women's Day 2024: மகளிர் தினத்துக்கும், ஊதா நிறத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
International Women's Day 2024: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களால் சாதிக்கப்பட்ட பெருமைகளையும், பெண்ணின் உரிமைகளைப் பற்றியும் இந்த தினம் பேசுகிறது.
பெண்கள் வெறும் சமையலறையில் மட்டும் இருக்க கூடாது தொழிலில், அரசியலில், பொருளாதாரத்தில் என எல்லா இடங்களிலும் அவர்கள் பங்கு பெற வேண்டும். இப்படி எல்லாத் துறைகளிலும் அவர்களின் அர்ப்பணிப்பு அவசியம் என்பதற்காக ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்கள் சர்வதேச மகளிர் தினத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.

எனவே உலகெங்கிலும் உள்ள பெண்ணிய இயக்கங்களில் ஊதா நிறம் குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது. குறிப்பாக இந்த ஊதா நிறம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஊதா நிறம் எதைக் குறிக்கிறது?
சர்வதேச மகளிர் தினம் (IWD) வலைத்தளத்தின் படி, ஊதா, பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் சர்வதேச மகளிர் தினத்தில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்த நிறங்கள் 1908 ஆம் ஆண்டு யுனைடெட் கிங்டமில் உள்ள பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (WSPU) சர்வதேச தோற்றத்தை ஏற்படுத்தியது. ஊதா நிறமானது நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நிறமானது நம்பிக்கையின் பிரதிபலிப்பாக உள்ளது. வெள்ளை நிறமானது தூய்மையை பறைசாற்றுகிறது.
WSPU, பிரிட்டிஷ் வாக்குரிமை இயக்கமானது மான்செஸ்டரில் 1903 இல் எம்மெலின் பன்குர்ஸ்டால் நிறுவப்பட்டது. இந்த WSPU இயக்கம் பெண்களின் வாக்குரிமைக்காக வாதிடுவதில் முக்கிய பங்காற்றியது.
ஊதா நிறம் பெண்ணியத்தை அடையாளப்படுத்துகிறதா?
யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள தேசிய பெண் கட்சி ஊதா, வெள்ளை மற்றும் தங்கத்தின் கலவையை ஏற்றுக்கொண்டது. டிசம்பர் 6, 1913 இல் வெளியிடப்பட்ட ஒரு செய்தித் தாளில் இந்த நிறங்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசியது. ஊதா நிறமானது விசுவாசத்தையும், உறுதியையும் குறிக்கிறது. வெள்ளை நிறமானது தூய்மையை குறிக்கிறது. தங்கமானது பெண்களின் நோக்கத்தை குறிக்கிறது.
வாக்குரிமை போராட்டம்
வாக்குரிமை இயக்க கொடிகளில் பெரும்பாலும் வெள்ளை நிறமானது இடம் பெற்றது. இது ஆண்கள் அழகற்றவர்கள் என்பதை கூறும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த மீடியா பிம்பத்தை எதிர்க்க வாக்குரிமையாளர்கள் முழு வெள்ளை நிற ஆடைகளை அணிவகுப்பில் அணிந்தனர். இந்த வெள்ளை நிற ஆடைகள் பெண்மை மற்றும் தூய்மையை வாக்குரிமைக்கான ஒருங்கிணைப்பாக அடையாளப்படுத்தியது.
எதிர்காலத்திற்கான வழிகாட்டல்கள்
பாலின சமத்துவமின்மை, பாகுபாடு போன்ற பிரச்சினைகளுடன் சமூகம் தொடர்ந்து போராடுகையில் சர்வதேச மகளிர் தினத்திற்கான வண்ணங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது. இந்த நிறங்களின் குறியீட்டின் பரிணாமம் பெண்ணிய இயக்கத்தின் ஆற்றல்மிக்க நன்மையையும், சமகால சவால்களையும் எதிர்கொள்ள சக்தியை வழங்குகிறது. ஊதா, பச்சை மற்றும் வெள்ளை நிறம் என்பது பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமத்துவத்திற்கான சக்திவாய்ந்த வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிறங்கள் பாலின சமத்துவத்தை அடைவதில் தெளிவான நினைவூட்டலாக செயல்படுகிறது. நீதி, நம்பிக்கை மற்றும் தூய்மை ஆகியவற்றின் முன்னோக்கிய பாதையாக இது செயல்படுகிறது.
மகளிர் தினத்தின் பச்சை நிறம்
பச்சை நிறம் என்பது பொதுவாக பசுமையான மலைகள், புல்வெளிகள் ஆகியவற்றை குறிக்க கூடியது. பச்சை நிறங்கள் நம்பிக்கைகள், புதிய தொடக்கங்கள் மற்றும் வளர்ச்சியை குறிக்க கூடியது. பச்சை நிறம் இயற்கையுடன் நெருங்கிய தொடர்பை குறிக்க கூடியது. மன அழுத்தத்தை தணிக்கிறது. மனநிலையை அதிகரிக்கிறது. நேர்மறையான எண்ணங்களை கொடுக்க கூடியது.
ஊதா நிறம்
இங்கிலாந்தில் ஊதா நிறமானது ஆடம்பரம், விசுவாசம் மற்றும் சுதந்திரத்திற்கான பெண்களின் தேடலைக் குறிக்கிறது. ஊதா நிறம் சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் பாலின சமத்துவத்தின் நிறமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு நீதி, கண்ணியம் மற்றும் தொலைநோக்கு சிந்தனைகளை கொடுக்க கூடியது.
வெள்ளை நிறம்
வெள்ளை நிறம் தூய்மை மற்றும் சமத்துவத்தை தெரிவிக்க கூடியது. உதாரணமாக 1978 ஆம் ஆண்டில் சம உரிமைகள் திருத்தத்தை ஆதரிப்பதற்காக 200,000 பெண்கள் வெள்ளை உடையணிந்து வாஷிங்டன் டி.சி.க்கு ஊதா மற்றும் பச்சை நிறத்தில் வெள்ளை நிற புடவைகளை அணிந்தனர். வெள்ளை நிறம் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
தங்க நிறம்
தங்க நிறம் அமெரிக்க வாக்குரிமையாளர்களுக்கு பிரபலமான நிறமாக பார்க்கப்படுகிறது. இந்த நிறம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.



Click it and Unblock the Notifications
