Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
International Women's Day 2024: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்!
International Women's Day 2024: 1911 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினம் என கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெண்களின் சாதனைகளை நினைவுகூறும் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு சமத்துவத்தை தர வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.
1975 ஆம் ஆண்டு மகளிர் தினமானது ஐக்கிய நாட்டு சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இந்த தினத்தில் பெண்களுக்கு விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இந்த சர்வதேச மகளிர் தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே அறிந்து கொள்வோம்.

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடத் துவங்கியது. இது முதலில் சர்வதேச மகளிர் ஆண்டாக வடிவமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாட்டு சபை உறுப்பினர்கள் பெண்களுக்காக இந்த நாளை கொண்டாட வலியுறுத்தியது. பெண்களும் அந்த அழைப்பை ஏற்று கொண்டாட துவங்கினர். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகளிர் தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்
* கியூபா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், கம்போடியா, லாவோஸ் மற்றும் ரஷ்யா போன்ற உலகின் பல பகுதிகளில் சர்வதேச மகளிர் தினம் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் அமைதிக்காக பாடுபடும் நாளாக பார்க்கப்படுகிறது.
* முதல் சர்வதேச மகளிர் தினமானது 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பின்னர் 1913 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
* சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் வகையில் லோகோவில் பெண் பாலின சின்னம் நிறுவப்பட்டு உள்ளது.
* கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவில் மார்ச் மாதத்தை பெண்கள் வரலாற்று மாதமாக அறிவித்தார்.
* 1971 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி முதல் உலகப் போரின் போது ரஷ்ய பெண்கள் ரொட்டி மற்றும் அமைதிக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மகளிர் தினத்தையொட்டி ரஷ்யா பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.
* உலகின் சில பகுதிகளில் அன்னையர் தினத்தையும் சர்வதேச மகளிர் தினத்தையும் ஒன்றாக கொண்டாடி வருகின்றனர். செர்பியா, அல்பேனியா, உஸ்பெகிஸ்தான், மாசிடோனியா போன்ற நாடுகளில் இரண்டு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மகளிர் தினத்தை பறைசாற்றும் நிறம் என்ன?
மகளிர் தினத்தை பறைசாற்றும் வகையில் ஊதா, பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் இடம் பெறுகின்றன. இந்த நிறங்கள் நீதி, நம்பிக்கை, தூய்மை மற்றும் கண்ணியத்தை குறிக்கும் விதமாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு மகளிர் தினத்துக்கான கோட்பாடு
ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்துக்கு என்றே தனித்துவமான கோட்பாடு வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு ஐக்கிய சபையின் வேண்டுகோள் இணங்க மகளிரின் முதலீடு மற்றும் அவர்களின் முன்னேற்றத்தை விரிவுபடுத்துதல் முக்கிய கருப்பொருளாக கூறப்பட்டுள்ளது.
பெண்கள் தினம் எவ்வளவு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது?
சர்வதேச மகளிர் தினமானது 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. 1909 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதன்முதலில் தேசிய மகளிர் தினத்தை கொண்டாடியபோது பெண்கள் தினமானது அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டே இந்த தினம் மற்ற கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1975 ஆம் ஆண்டு தான் மகளிர் தினம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மகளிர் தினத்தை நீங்கள் எப்படி கொண்டாடலாம்?
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வரலாம். உங்கள் வாழ்க்கையில் உங்கள் வெற்றியில் துணையாக நின்ற பெண்களுக்கு நீங்கள் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்கலாம். வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள், மேற்கோள்கள், செய்திகள் போன்றவற்றை அனுப்பி அவர்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை கூறலாம். அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள். இந்த சர்வதேச மகளிர் தினத்தை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவோம். பெண்களின் முன்னேற்றம் ஒரு நாட்டின் முன்னேற்றமாக திகழும்.



Click it and Unblock the Notifications