Latest Updates
-
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
International Men's Day 2023: சர்வதேச ஆண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது எனத் தெரியுமா?
International Men's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் ஆண்களின் பங்கானது மிகவும் முக்கியமானது. ஆண்கள் இந்த சமூகத்தில் செய்த சாதனைகள் மற்றும் பங்களிப்பை கொண்டாடும் வகையில் இந்த சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆண்கள் தங்கள் சொந்த தேவைகளை கவனிக்காமல் தங்கள் முழு வாழ்க்கையும் தங்கள் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் அர்பணிப்பதை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் சமுதாய பங்களிப்பை நினைவுகூறும் வகையிலும் இந்த சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே அறிந்து கொள்வோம்.
சர்வதேச ஆண்கள் தின வரலாறு
சர்வதேச ஆண்கள் தினமானது 1999 ஆம் ஆண்டில் இருந்து தான் தொடங்கப்பட்டது. 1990 களின் முற்பகுதியில் மிசோரி ஆண்கள் ஆய்வு மையத்தின் இயக்குனர் தாமஸ் ஓஸ்டர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மால்டாவிலிருந்து பல்வேறு குழுக்களை நியமித்து சிறிய கூட்டங்களை நடத்தினார். அப்பொழுது தான் அவருக்கு வரலாற்றில் ஆண்களை சிறப்பிக்க கூடிய வகையில் ஒரு நாள் இல்லையே என்று தோன்றியது. இதுவே 1999 ல் சர்வதேச ஆண்கள் தினம் நிறுவ வழிவகுத்தது. அதன் பிறகு இந்த சர்வதேச ஆண்கள் தினம் உலகளவில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. இப்பொழுது உலகளவில் இந்த சர்வதேச ஆண்கள் தினம் புகழ்பெற்று உள்ளது.
சர்வதேச ஆண்கள் தினத்திற்கான முக்கியத்துவம்
நம் உலகம் ஆணாதிக்க சமூகமாக இருந்தால் கூட ஆண்கள் தங்களை வெளிப்படுத்தும் விஷயங்களில் பின்தங்கியே உள்ளன. ஒவ்வொரு ஆண்களும் கடினமாக உழைக்கக் கூடிய நபராக இருந்து வருகிறார்கள். அத்தகைய ஆண்களை கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சர்வதேச ஆண்கள் தினம். இந்த சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை இந்த தினம் நமக்கு உணர்த்துகிறது.
சர்வதேச ஆண்கள் தின இலக்குகள்
2023 ஆம் ஆண்டில் சர்வதேச ஆண்கள் தினத்தின் இலக்காக " பூஜ்ய ஆண்கள் தற்கொலை" என்பது உள்ளது. ஆண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் மனம் மற்றும் உடல் நல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆண் சமூகம் ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழ வேண்டும் என்பதே இந்த தினத்தின் இலக்காக அமைகிறது.
ஆண்கள் எதிர்கொள்ளும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள்
தற்போதைய ஆராய்ச்சி படி, ஆண்கள் கீழ்க்கண்ட சுகாதார நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
- ஆண்களின் தற்கொலை விகிதம் பெண்களை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
- 3 ஆண்களில் ஒருவர் குடும்ப வன்முறையால் பாதிப்படைகின்றனர்.
- ஆண்கள் பெண்களை விட 4-5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர்.
- பெண்களை விட ஆண்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
- பெண்களை விட ஆண்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஆண்கள் தினத்தை எப்படி கொண்டாடலாம்?
சர்வதேச ஆண்கள் தினமானது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆபிஸ் அலுவலகங்களில் கொண்டாடப்படலாம். அவர்களுடன் சிறப்பான நேரத்தை செலவிடலாம். அவர்களை பாராட்டும் வகையில் கடிதங்கள் மற்றும் அட்டைகளில் உங்கள் பாராட்டுகளை எழுதி அவர்களுக்கு பரிசளிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் பங்களித்த ஆண்களுக்கு நீங்கள் கூறும் நன்றி மிகப்பெரியது.
சர்வதேச ஆண்கள் தினத்தின் ஆறு நோக்கங்கள் என்னென்ன?
- திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் ஒழுக்கமாகவும் , நேர்மையாகவும் வாழும் ஆண் தொழிலாளிகளையும் நாம் கவுரவிக்க வேண்டும்.
- சமூகம், குடும்ப பங்களிப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் இவற்றில் பங்களிக்கும் ஆண்களை கொண்டாட வேண்டும்.
- ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும்.
- ஆண்களுக்கு எதிரான பாகுபாட்டை சரி செய்ய வேண்டும். சமூக சேவைகள், சமூக அணுகுமுறைகள், எதிர்ப்பார்ப்புகள் மற்றும் சட்டங்கள் வழியாக சரிசெய்ய வேண்டும்.
- பாலின உறவுகளை மேம்படுத்தவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் வேண்டும்.
- ஆண்கள் பாதுகாப்பாக இருக்கவும் மற்றும் அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
இந்த சர்வதேச ஆண்கள் தினத்தில் நம் வீட்டில் மற்றும் நம் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு ஆண்களுக்கும் நம் பாராட்டையும் நன்றியையும் தெரிவிப்போம். அவர்களின் பங்கு மிகப்பெரியது.



Click it and Unblock the Notifications