Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
நீங்க இருக்குற இடத்துல இருந்து பூமியில் நேராக ஒரு சுரங்கம் தோண்டினால், எந்த நாட்டை அடைவீங்க-ன்னு தெரியுமா?
Interactive Map: நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நேராக ஒரு சுரங்க பாதையைத் தோண்டினால், நீங்கள் எங்கு போய் சேர்வீர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் அப்படி யோசித்ததுண்டு என்றால், உங்களின் அந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் ஒரு சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று உள்ளது. அது தான் Antipodesmap.
இந்த இணையதளத்தின் பெயரைப் போன்றே, இந்த இணையதளத்தின் மூலம் பூமியின் ஒரு பகுதியில் இருந்து நேராக குழியைத் தோண்டினால், அதன் எதிர்முனை என்னவாக இருக்கும் என்பதை அறியலாம். அதாவது நீங்கள் இருக்கும் நகரத்தில் இருந்து நேராக பூமியில் குழியைத் தோண்டினால், உங்களின் எதிர்பகுதியில் என்ன நகரம் அல்லது இடம் உள்ளது என்பதை இந்த இணையதளம் கூறும்.

பூமி உருண்டையாக இருப்பதால், அதன் வழியே ஒரு குழியைத் தோண்டும் போது, முற்றிலும் வேறுபட்ட இடத்தில் நீங்கள் இருப்பீர்கள். antipodesmap.com என்னும் இணையதளத்தில் உள்ள வரைபடம் பயனர்களின் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதித்து, அந்த இருப்பிடத்திற்கு நேர் எதிர்முனையில் என்ன இருக்கியது என்பதை பார்க்க அனுமதிக்கிறது.
இந்த இணையத்திற்கு நீங்கள் சென்றால், அங்கு திரையின் இடது பக்கத்தில் உள்ள வரைபடத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்யும் போது, வலது பக்கத்தில் உள்ள வரைபடத்தில், தேர்வு செய்யப்பட்ட இடத்தின் நேர் எதிர்முனையில் உள்ள இடத்தில் ஒரு மனிதனின் தலை தெரியும்.
உதாரணமாக, சிங்கப்பூரில் இருந்து நேராக குழி தோண்டினால், அவர்கள் அதன் நேர் எதிர்முனையில் ஈக்வடாரில் உள்ள பாஸ்தாசாவை அடைவார்கள். அதேப் போல் மலேசியாவில் இருந்து குழி தோண்டினால், அவர்கள் பெருவில் உள்ள அமேசானாஸ் பகுதியை அடைவார்கள்.
சரி, நீங்கள் இந்தியாவில் இருந்து குழி தோண்டினால், உலகில் எந்த பகுதியை அடைவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த antipodesmap.com என்னும் இணையதளத்திற்கு சென்று உங்கள் இருப்பிடத்தை குறிப்பிட்டு சோதனை செய்து பாருங்கள்.
நிச்சயம் இது உங்களுக்கு ஒரு வேடிக்கையாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் பகுதியில் இருந்து நேராக பூமியில் குழியைத் தோண்டினால் எந்த பகுதியை அடைகிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications