Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மிகவும் பிரபலமான சில இந்திய உணவுகள்!
Indian Foods Banned Abroad: உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு உணவுகள் பிரபலமாக இருக்கும். அப்படி பிரபலமாக இருக்கும் உணவுகள் அந்நாட்டில் மட்டுமின்றி, மக்கள் குடிபெயரும் போது, அது மற்ற நாடுகளுக்கும் பரவி பிரபலமாக இருக்கும். முக்கியமாக உலகம் முழுவதும் இந்திய உணவுகள் பிரபலமானவை.

என்ன தான் இந்திய உணவுகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவையாக இருந்தாலும், சில இந்திய உணவுகளை உலகின் சில நாடுகளில் காண முடியாது. ஏனெனில் அந்நாட்டில் இந்த உணவு விற்க தடைசெய்யப்பட்டிருக்கும். அப்படி இந்தியாவில் பிரபலமாக இருக்கும் எந்த உணவுகளை வெளிநாடுகளில் காண முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள இந்திய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. நெய்
இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப் பொருள் தான் நெய். சொல்லப்போனால் இந்திய உணவுகளின் சுவையை மேம்படுத்துவதில் நெய் முக்கிய பங்கை வகிக்கிறது. வெண்ணெயில் இருந்து பெறப்படும் நெய்யில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதை உட்கொண்டால் மாரடைப்பு, இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகரிக்கும் என்று கருதி, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இங்கு நெய் விற்க தடை செய்துள்ளது.
2. ச்யவன்பிரஷ்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் அடங்கிய ஒரு பிரபலமான பொருள் தான் ச்யவன்பிரஷ். ஆனால் இந்த ச்யவன்பிரஷ் கனடாவில் 2005 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. இந்த ச்யவன்பிரஷ் தடை செய்யப்பட்டதற்கு காரணம் அதில் ஈயம் மற்றும் பாதரசம் போன்றவை அதிக அளவில் இருப்பது தான் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
3. கபாப்
சிக்கன் என்றாலே 65-க்கு அடுத்தப்படியாக கபாப் தான் அனைவருக்கும் சாப்பிட நாவூறும். ஆனால் வெனிஸில் இந்த சுவையான கபாப் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தெரியுமா? இந்த வெனிஸில் 'நகரத்தின் அலங்காரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாக்க' 2017 ஆம் ஆண்டில் கபாப் கடைகள் இருக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
4. சமோசா
இந்தியாவில் மாலை வேளையில் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் தான் சமோசா. ஆனால் இந்த சமோசாவானது தென்னாப்பிரிக்காவின் சோமாலியாவில் இந்த சமோசா தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிந்தால் நிச்சயம் சிரிப்பு தான் வரும். அது என்னவெனில் தென்னாப்பிரிக்காவில் AI-Shabaab குழுவிற்கு கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கும் முக்கோண வடிவத்தில் சமோசா இருப்பதன் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.
5. சூயிங் கம்
சிங்கப்பூர் சுத்தத்திற்கு பிரபலமான ஒரு நாடு. இங்கு ரோட்டில் குப்பையைப் போட்டாலே தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சிங்கப்பூரில் சூயிங் கம் சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் சூயிங் கம் சாப்பிட்டுவிட்டு, அதை கண்ட இடங்களில் தூக்கி எறியவோ அல்லது ஒட்டவோ வாய்ப்புள்ளது என்பதால் சூயிங் கம் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
6. கசகசா
இந்தியாவில் குருமா, குழம்பு போன்றவற்றில் சேர்க்கப்படும் ஒரு முக்கியமான பொருள் தான் கசகசா. இந்த கசகசாவானது சவூதி அரேபியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் கசகசாவில் மார்பின் என்ற போதைப் பொருளானது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் இந்நாடுகளில் கசகசா விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
7. கெட்சப்
இந்தியாவில் கெட்ச்அப் இல்லாமல் எந்த சிற்றுண்டியும் நிறைவடையாது. தக்காளி கெட்சப் இனிப்பும், புளிப்பும் கலந்து சுவையாக இருப்பதால், இளைஞர்கள் இதை அதிகம் சாப்பிடுவதை கவனித்த பிரெஞ்சு அரசாங்கம், இந்த கெட்சப்பை விற்க தடைசெய்துள்ளது.



Click it and Unblock the Notifications