Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
சூரிய கிரகண நாளில் உருவாகும் 2 அசுப யோகங்களால் இந்த 3 ராசிக்கு பிரச்சனை அதிகரிக்கப் போகுது..
Solar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழவுள்ளது. அதுவும் இந்த சூரிய கிரகணம் நிகழும் போது இரண்டு அசுப யோகங்களும் உருவாகியிருப்பதால், அதன் தாக்கம் சில ராசிக்காரர்களின் மீது சற்று மோசமாக இருக்கும்.
முக்கியமாக 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஒரு ஹைப்ரிட் சூரிய கிரகணம். இந்த கிரகண நாளில் சூரியன் மேஷ ராசியில் இருப்பார். அதே சமயம் ராகுவும் மேஷ ராசியில் இருப்பதால், ராகு மற்றும் சூரியனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகியிருக்கும். அதே வேளையில் புதன் மேஷ ராசியிலும், செவ்வாய் மிதுன ராசியிலும் இருக்கும். அதாவது மேஷ ராசியின் அதிபதி மிதுனத்திலும், மிதுன ராசியின் அதிபதி மேஷ ராசியிலும் இருப்பது அசுப யோகத்தை உருவாக்கும்.

இப்படி சூரிய கிரகண நாளில் இரண்டு அசுப யோகங்கள் உருவாவதால், இதன் தாக்கமானது 3 ராசிகளின் மீது சற்று மோசமாக இருக்கும். இப்போது கிரகண நாளில் உருவாகும் அசுப யோகங்களால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்காது. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் சற்று அதிகரிக்கும். வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் தவறான விளைவுகளைத் தரும். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமானது அல்ல.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கிரகண யோகமானது ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். தொழில் மற்றும் குடும்ப விஷயங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் சூழ்நிலைகளை கையாள்வது கடினமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் குணம் சற்று மோசமாக மாறும். உங்களின் கோபம் அதிகரிக்கும். இதனால் அதிக வாக்குவாதத்தில் ஈடுபடலாம். உங்களின் நிதி நிலை மோசமாகும். ஆரம்பரமான செலவு உங்களின் பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலை மோசமாக இருக்கும். பழைய நோய்கள் மீண்டும் தலைத்தூக்கும். குடும்பம் தொடர்பான விஷயம் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரும். வியாபாரிகள் இக்காலத்தில் பல பிரச்சனைளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உங்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இக்காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


