Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
Hug Day 2024: இதுல நீங்க எப்படி கட்டிப்பிடிப்பீங்க-ன்னு சொல்லுங்க.. அதோட அர்த்தத்தை சொல்றோம்...
Hug Day 2024: ஒவ்வொரு ஆண்டும் காதலர் வாரத்தின் 6 ஆவது நாளில் ஹக் டே என்னும் அரவணைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடிப்பது என்பது உடல் ரீதியாக தொட்டு அன்பை வெளிப்படுத்தும் ஒரு அன்பின் வெளிப்பாடு. இந்த கட்டிப்பிடிக்கும் செயல் பழங்காலம் முதலாக இருந்து வருகிறது. கட்டிப்பிடிப்பது அரவணைப்பு, ஆறுதல், அன்பின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.
கட்டிப்பிடிப்பது வெறும் உடல் சைகைகள் அல்ல; அவை உறவுகளின் ஆழத்தை பிரதிபலிக்கும் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு உறவுக்குரிய அரவணைப்பும் அதன் தனித்துவமான அர்த்தத்தைக் கொண்டு நமது வாழ்க்கையை அன்பால் வளப்படுத்துகிறது.

எனவே கட்டிப்பிடிப்பது, காதலிப்பவர்களுக்கும், திருமணமானவர்களுக்கும் மட்டுமல்ல என்பதை புரிந்து, உங்கள் அன்பை, சந்தோஷத்தை, ஆறுதலை, அரவணைப்பை உங்களுக்கு பிடித்தவரை ஒருமுறை கட்டிப்பிடித்து வெளிப்படுத்துங்கள். இப்போது கட்டிப்பிடிப்பதில் உள்ள 6 வகைகளையும், அவற்றின் அர்த்தங்களையும் காண்போம்.
1. சைடு ஹக்
சைடு ஹக் என்பது ஒருவரை ஒருவர் இடுப்பையோ அல்லது தோள்களையோ சுற்றிக் கொண்டு கட்டிப்பிடிப்பதாகும். இந்த அரவணைப்பின் போது, இரண்டு நபர்களும் அருகருகே நின்று ஒருவர் இடது கையாலும், மற்றவர் வலது கையாலும் கட்டிப்பிடிப்பர். வழக்கமாக இந்த மாதிரியான அரவணைப்பு நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே பொதுவானது. அதாவது மிகவும் நெருக்கமாக இல்லாதவர்களுக்கான அரவணைப்பு இது.
2. பிரண்ட் ஹக்
பிரண்ட் ஹக் என்பது இரண்டு நபர்களும் தங்களின் மார்பைப் தொடும் வகையில் இரண்டு கைகளால் கட்டிப்பிடிப்பது. இந்த மாதிரியான அணைப்பில், இரண்டு நபர்களின் இடுப்பிற்கு இடையே தூரம் இருக்கும். எனவே இந்த மாதிரியான அணைப்பு மிகவும் நெருக்கமான நண்பர்களிடையே பொதுவானது. இந்த அணைப்பில் காதலோ, காமமோ எதுவும் இருப்பதாக தெரியாது.
3. பின்னிருந்து கட்டிப்பிடிப்பது
இந்த வகையான அணைப்பு ஒரு காதல் உறவைக் குறிக்கலாம். காதலிப்பவர்கள், திருமணமானவர்கள் இந்த மாதிரி ஒரு உரிமையுடன், காதலுடன் கட்டிப்பிடிப்பார்கள். இந்த அணைப்பின் போது, ஒருவர் மற்றவருக்கு பின்னால் நெருக்கமாக இருந்து கட்டிப்பிடிப்பார். இப்படியான அணைப்பின் போது இருவரும் காதலையும், சௌகரியத்தையும் உணர வைக்கிறது.
4. இடுப்பைச் சுற்றி கட்டிப்பிடிப்பது
இதுவும் ஒரு வகையான அணைப்பு. இந்த அணைப்பின் போது இருவரும் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அவர்களின் கைகள் ஒருவருக்கொருவர் இடுப்பில் சுற்றிக் கொள்ளப்படும். இந்த வகையான அணைப்பு தம்பதிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும். இந்த வகை அரவணைப்பும் காதல் மற்றும் ஆறுதலைக் குறிக்கிறது.
5. கரடி அணைப்பு
இந்த கரடி அணைப்பு பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வகையான அணைப்பாகும். இந்த அணைப்பின் போது பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் தோள்பட்டையில் ஒருவரும், இடுப்பில் ஒருவரும் கைகளால் கட்டிப்பிடித்து இறுக்கமாக நீண்ட நேரம் அழுத்துவார்கள். இந்த வகையான அணைப்பும் காதலர்கள் மற்றும் தம்பதிகளிடையே காதல், பிரிக்க முடியாத அன்பை குறிக்கிறது.
6. ஒன்-சைடு ஹக்
இந்த வகையான அணைப்பில் இருவரும் ஒருவரையொருவர் எதிரெதிரே நின்று, ஒரு பக்கமாக கட்டிப்பிடிப்பார்கள். இப்படியான அணைப்பைப் பார்க்கும் போது ஒருவர் கொடுப்பதை, மற்றவர் பெறும் வகையில் இருக்கும். இந்த வகையான அணைப்பு தெரிந்தவர்கள், பழகியவர்கள், நண்பர்களை சந்திக்கும் போது மேற்கொள்ளப்படும்.



Click it and Unblock the Notifications