Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ஆன்லைன் டேட்டிங்கில் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?
இங்கே ஆன்லைனில் டேட்டிங் செல்கின்றவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது பற்றி இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் மனதுக்கு, ஆன்மாவுக்குப் பிடித்த ஜோடியை தேடிக் கண்டறிவது ஒரு கடினமான எண் விளையாட்டுப் போன்றது. அதில் சோகம் என்னவென்றால் முரண்பாடுகள் உண்மையான அன்பைத் தருவதில்லை. உண்மையில், ஆராய்ச்சிகள் கூறுவது என்னவெனில் இது ஒரு சுமையான பந்தயம். மேலும், ஒரு நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடும் ஆண்களும் பெண்களும் ஒருவருடத்திற்கு சுமார் 15 லிருந்து 25 புதிய டேட்களில் ஈடுபட வேண்டும் எனவும் அந்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அவர் அல்லது அவள் ஒன்று அல்லது இரண்டு சாத்தியமான நீண்டகால பார்ட்னர்களைச் சந்திக்க நினைக்கிறார்கள், ஆனால் குறிப்பிடத்தக்க தனி நபர்கள் பார்ட்னர்களை தேர்தெடுக்கும் முன்னரே விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். அதே ஆராய்ச்சி பல சாத்தியமான வெற்றியைப் பெற முடியும் என்பதையும் குறிக்கிறது. பெரும்பாலும் இவர்கள் நான்கு அல்லது ஐந்து டேட்களுக்குப் பிறகு விலகிவிடுகிறார்கள்.

டேட்டிங்
இது பொதுவாக, அவர்கள் திறமையற்றவர்கள் இல்லை என்பதைக் கூறுவதாக இருக்கலாம் அல்லது வெற்றியடைவதன் நுழைவாயிலாகக் கூட இருக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நடக்கும் பல திருமணங்களில், பாரம்பரியமாக நடக்கும் கூட்டங்கள், கிளப் மற்றும் மற்ற சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் சந்திக்கும் ஜோடிகளை விட ஆன்லைனில் சந்திக்கும் ஜோடிகளே அதிகம். ஆன்லைன் டேட்டிங் வழியே வாழ்க்கைத் துணையை சந்திப்பது மிகவும் வெற்றிகரமான வழியாக மாறிவிட்டது. உங்களுக்கு நேர்மறை, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான ஆன்லைன் டேட்டிங் அனுபவத்தை உறுதிப்படுத்த சில குறிப்புகள் கீழே உள்ளன.

தனிப்பட்ட தரவுகள்
உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை ஆன்லைனில் தரவேற்றம் செய்யாதீர்கள். அதாவது, உங்கள் முகவரி, தொலைபேசி எண் அல்லது உண்மையான மின்னஞ்சல் முகவரியை பகிர்வதற்கு முன்னர் அந்த நபரைச் சந்தித்து, நம்பிக்கை ஏற்படும் வரை காத்திருங்கள்.
தெளிவான, உண்மையான டேட் புகைப்படத்தைப் பதிவேற்றவும், அது இதே புகைப்படம் வேறெங்காவது பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க உதவும். பல ஸ்கேமர்கள் பேஸ்புக் பக்கங்களில் இருந்து புகைப்படங்களைத் திருடுகிறார்கள்.

மோசமான வார்த்தைகள்
ஸ்கேமெர்ஸ் பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் போது, பல தொடர்புகள் வெளிநாடுகளில் இருந்து வருவது போலத் தெரியும். அந்த சமயங்களில், அவற்றில் பெரும்பாலான உரைகள் மோசமான இலக்கணத்தால் நிறைந்திருக்கும், பெரும்பாலும் ஒற்றைப்படைத் தொனியைக் கொண்டிருக்கும்.

பெப்பர் ஸ்ப்ரே
எல்லா நேரங்களிலும் பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்துத் செல்லுங்கள். அது உங்களுக்குப் பாதுகாப்பானது. நீங்கள் பெப்பர் ஸ்ப்ரே, டீஸர் முதலியனவற்றை எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்றால், முதலில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு அழைத்தல்
ஆன்லைன் டேட்டை மட்டுமே நம்பி உங்கள் துணையை வீட்டிற்கு கூட்டி வர வேண்டாம். அதேபோல், முதல் ஆன்லைன் டேட்டில், அவரை வீட்டிற்கு அழைக்க வேண்டாம். ஆமாம், அந்த அழைப்பு அவர்களுக்கு இனிமையாகவும், பெருந்தன்மையாகவும் இருக்கலாம், ஆனால் நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதை அவர்கள் இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.



Click it and Unblock the Notifications