Latest Updates
-
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா இவங்க மட்டன் மட்டும் நல்லா சாப்பிடுவாங்க -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
2024-ல் இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்களாம்... கெட்ட நேரம் போக என்ன பண்ணனும் தெரியுமா?
Horoscope 2024: 2023 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது, 2024 ஆம் ஆண்டை நாம் விரைவில் நெருங்கப்போகிறோம். அனைவருமே வரவிருக்கும் புத்தாண்டு தங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை அறிய விரும்புகிறார்கள், அது உண்மையில் தொடங்குவதற்கு முன்பே.
இந்த விஷயத்தில் 2024 உங்களுக்கு அதிர்ஷ்டமானதா அல்லது துரதிர்ஷ்டமானதா என்று நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும். வரப்போகிற ஆண்டு அனைவருக்கும் அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் நிறைந்ததாக இருந்தாலும், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக இருக்கப்போகிறது.

இந்த ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கப்போகிறது மற்றும் அதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமையாது. இந்த ஆண்டு, உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சனி ஆறாவது வீட்டில் அமைந்து, ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் 8 மற்றும் 12 ஆம் வீடுகளைப் பார்ப்பதால், உங்கள் வாழ்க்கையில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உங்கள் செலவுகள் உயரும், உங்கள் வேலையில் சில இடையூறுகள் ஏற்படலாம். ராகு ஆண்டு முழுவதும் ஏழாவது வீட்டில் இருப்பார், எனவே உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது உங்களுக்கு பயனளிக்கும். இல்லையெனில், உங்கள் காதலனுடனான உங்கள் உறவு பாதிக்கப்படலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சோதனையான மாதமாக இருக்கும், 2024அவர்களுக்கு சாதகமற்ற பலன்களை அளிக்கப்போகிறது. இந்த ஆண்டு உங்கள் பேச்சில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஆத்திரத்தில் ஏதாவது சொல்வதற்கு முன், நூறு முறை சிந்திப்பது அவசியம். இல்லையெனில், அது உங்கள் தொழிலை மட்டுமல்ல, உங்கள் குடும்ப வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும். இதைத் தொடர்ந்து, மே 1 ஆம் தேதி, வியாழன் பெயர்ச்சி, உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்கும்.
இந்த வருடம் சோம்பல் உங்களை கடுமையாகப் பாதிக்கலாம், ஆனால் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். உத்தியோகத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம், குடும்ப வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் ஏற்படலாம். நிதிநிலையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு உங்கள் செலவுகள் உயரும் என்று எதிர்பார்க்கலாம். இது போன்ற, செலவுகளைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இறுதியாக, ராகு நான்காம் வீட்டிலும் கேது பத்தாம் வீட்டிலும் இருப்பதால் உடல்நலம் சம்பந்தமாக உங்களுக்கு நோய் வரலாம். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஜோதிட பரிகாரங்கள்
2024 உங்களுக்கு மோசமான ஆண்டாக மாறினால் கவலைப்பட வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமான பலன்களைப் பெற நீங்கள் பயன்படுத்த வேண்டிய சில பரிகாரங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
- சூரிய பகவானை தவறாமல் வணங்குங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் அதிக கண்ணியத்தையும் மரியாதையையும் பெறுவீர்கள், அதே போல் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள்.
- செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் குங்குமத்தை ஊற்றி, அதை சிவபெருமானுக்கு சமர்பித்து வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை அகற்றலாம்.
- புத்தாண்டு தினத்தில் உங்கள் வீட்டில் துளசி செடியை வளர்க்கலாம். இதன் விளைவாக, சுற்றுச்சூழலும் சுத்திகரிக்கப்படும், மேலும் உங்கள் வீடு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
- உங்கள் வீட்டில் உடைந்த கடவுள் சிலைகள் இருந்தால் உடனே அதனை வெளியேற்றவும். பிறகு, ஆண்டு தொடக்கத்தில், விநாயகப் பெருமானின் சிலையை உள்ளே கொண்டு வாருங்கள்.



Click it and Unblock the Notifications

