Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
2024-ல் இந்த 4 ராசிக்காரங்க விபத்துகளுக்கு ஆளாகப்போறாங்களாம்... ரோட்டுல போறப்ப பார்த்து போங்க...!
Horoscope 2024: நம் வாழ்க்கையில் விபத்துக்கள் எப்போதும் நடக்கும் என்று நம்மால் ஒருபோதும் கணிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் நடப்பதால்தான் அதன் பெயர் விபத்து. ஒரு விபத்து ஒருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடும், சில சமயங்களில் விபத்துகள் அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் மாற்றக்கூடும்.
விபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள் பெரும்பாலும் ரிஸ்க் எடுப்பதில் உள்ள விருப்பம், கவனம் இல்லாமை, மனக்கிளர்ச்சி அல்லது பொறுப்பற்ற தன்மையால் அதற்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் சில வெளிப்புற தூண்டுதலும் அவர்களை விபத்துக்கு ஆளாக்கலாம்.

2024- ஆம் ஆண்டு ஜோதிட கணிப்புகளின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் ஆரோக்கியரீதியாக பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள், ஆரோக்கிய பிரச்சினைகள் என்று வரும்போது அதில் விபத்துக்களும் அடங்கும். இந்த பதிவில் 2024-ல் எந்தெந்த ராசிக்காரர்கள் விபத்துக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
2024 ஆம் ஆண்டில், மேஷ ராசி அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் எதிர்பாராத தடைகளையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் தொழில் செயல்பாடுகள், தனிப்பட்ட உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்களின் பின்னடைவை சந்திப்பார்கள்.
இவர்கள் பொதுவாக தங்கள் இலக்குகளில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் அவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை இழக்கலாம். வரும் ஆண்டில் அவர்களின் விபத்துக்கள் பெரிய கூட்டங்களுக்கு நடுவே நிகழலாம், இதனால் உடனடி உதவிகள் கிடக்கலாம். இருப்பினும், அவை சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துகளாகவே இருக்கும்.
மிதுனம்
2024 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் பல முரண்பாடுகளை சந்திக்க நேரிடும். இவர்கள் பொதுவாகவே தங்கள் முடிவெடுக்கும் செயல்பாட்டில் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற உணர்வுகளை எதிர்கொள்ளலாம். 2024-ல் இது மிகவும் அதிகரிக்கும். அவர்கள் பொதுவாக அதிகமாக ஊர்சுற்றும் குணம் கொண்டவர்கள். தங்களின் பெரும்பாலான நேரத்தை பொழுதுபோக்கிற்காக செலவழிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.
2024-ல் அவர்களின் கேளிக்கை விருப்பம் அவர்களை சில விபத்துகளில் சிக்க வைக்கலாம். விளையாட்டுத்தனமாக அவர்கள் எடுக்கும் ரிஸ்க் அவர்களை சில மாதங்கள் முடக்கி வைக்கும் விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். எனவே கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிம்மம்
2024-ல் சிம்ம ராசிக்காரர்கள் தனிப்பட்ட சவால்கள் மற்றும் குடும்ப மோதல்களை எதிர்கொள்ளலாம். இந்த சவால்களை சமாளிக்க, சிம்ம ராசிக்காரர்கள் சுய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன், குறிப்பாக நண்பர்கள் குழுவுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.
அவர்கள் அனைத்திலும் எளிதில் சலிப்படைவதால், அவர்களின் பொறுமையின்மையே அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விபத்துகளை ஏற்படுத்தும். விஷயங்களை எப்போதும் விரைவாக அனுபவிக்க அவர்கள் அடிக்கடி முட்டாள்த்தனமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் 2024-ல் அதிகளவு எதிர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பார்கள். 2024-ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்கள் பல விஷயங்களில் துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தை மதிக்கிறார்கள், அவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை எப்போதும் மதிக்க மாட்டார்கள்.
அதனால்தான் அவர்கள் அடிக்கடி தன்னிச்சையாக ஏதாவது விஷயங்களில் ஈடுபட்டு விபத்துக்கு ஆளாகிறார்கள், ஏனெனில் அவர்களால் வேகத்தை குறைக்க முடியாது. அவர்களின் உற்சாகம் அவர்களை எப்போதும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
