Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்களுக்கு 2024-ல் மிகப்பெரிய வேலை கிடைக்கபோகுதாம்... வெற்றிபடிக்கட்டுல ஏற தயாராகுங்க!
Horoscope 2024: 2024 ஆம் ஆண்டிற்குள் நுழைய நீங்கள் தயாராக உள்ளீர்களா? ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக நிலைகள் 2024-ல் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கப்போகிறது. அதன்படி சில ராசிக்காரர்கள் வரப்போகிற ஆண்டில் சிறப்பான எதிர்காலத்திற்க்கு அடித்தளமான அவர்களின் கனவு வேலையை அடையப்போகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி,வரப்போகிற 2024-ல் 4 ராசிக்காரர்களுக்கு வேலையில் மிகப்பெரிய மாற்றங்களும், உயர்வுகளும் கிடைக்கப்போகிறது. ஒருவேளை நீங்கள் வேலையில் இல்லாமல் வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அதிலும் முன்னேற்றத்தைக் காணலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2024-ல் இந்த அதிர்ஷ்டம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
தைரியமான மற்றும் லட்சிய வெறி கொண்ட மேஷ ராசிக்காரர்கள், 2024 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பான ஆண்டை பெறப் போகிறார்கள். நீங்கள் நீண்ட காலமாக கனவு காணும் வேலையைப் பெறுவதற்கான சரியான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும், வாய்ப்புகள் உங்கள் கதவைத் தட்டும் என்று கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.
உங்கள் விதி உங்களுக்கு வழங்கும் புதிய பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள், புதிய வேலையில் இருக்கும் புது சவால்களையும் எதிர்கொள்ள தயாராகுங்கள். உங்களின் உறுதியும், ஆற்றலும் உங்கள் கனவு வாழ்க்கைக்கு நேராக வழிவகுக்கும் கதவுகளைத் திறக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு, 2024 பல துறைகளில் குறிப்பாக வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றிக்கான ஆண்டாக இருக்கும். உங்கள் திறமைகள் மற்றும் ஆர்வங்களின் பல்வேறு அம்சங்களை ஆராய கிரகங்கள் உங்களை ஊக்குவிக்கலாம்.
உங்களின் உண்மையான திறமையோடு ஒத்துப்போகும் வேலையை அடைவதற்கு உங்களின் தகவமைப்புத் திறன் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த வருடம் திறந்த மனதுடன் இருங்கள், உங்கள் கனவு வேலை நீங்கள் எதிர்பார்க்கும் தருணத்தில் வரலாம். மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள், நட்சத்திரங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் கனவு வாழ்க்கையை அடைவதற்கு தயாராக இருங்கள். 2024 இல் உள்ள கிரக நிலைகள் உங்கள் கவர்ச்சியான மற்றும் நம்பிக்கையான இயல்புக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தலைமைத்துவ குணங்கள் அங்கீகரிக்கப்படும், மேலும் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் தேடிவரும்.
இந்த வருடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் ஆர்வம் உங்களுக்கு வழிகாட்டும். தொழில்முறை வெற்றிக்கான உங்கள் பயணம் நட்சத்திரங்களின் கதிரியக்க ஆற்றலால் ஒளி பெறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, 2024-ல் உங்களின் அசைக்க முடியாத உறுதியே உங்களின் ரகசிய ஆயுதமாகும். உங்கள் ராசியின் கோள்களின் மாற்றங்கள் தொழில்முறை ஏணியில் ஒரு நிலையான ஏற்றத்தைக் குறிக்கிறது. உங்கள் ஒழுக்கமான அணுகுமுறை மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு சரியான அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.
மகர ராசிக்காரர்களே, உங்கள் கனவு வேலைக்கு படிக்கட்டுகளாக இருப்பதால், சவால்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேறி செல்லும் உங்களுக்கு வெற்றி காத்திருக்கிறது, மேலும் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
