Latest Updates
-
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம்
2024-ல் இந்த 5 ராசிக்காரங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் அமோகமா இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2024: இந்த புத்தாண்டு தங்கள் வாழ்க்கையில் புதிய மற்றும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். சிலர் குழந்தைகளைப் பெறுவார்கள், சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையை அல்லது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சிலருக்கு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும், சிலருக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் காணும் ஒரு பொதுவான கனவு உள்ளது, அதுதான் தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்குவது என்பதாகும்.

ஒவ்வொருவரும் தங்கள் கனவுக வீட்டை வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், அதில் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தங்கள் வாழ்க்கையை செலவிடலாம். ஆனால் அனைவரும் தங்கள் கனவு வீட்டை சொந்தமாக்குவதில் வெற்றி பெறுவதில்லை.
சிலர் மிகவும் கடினமாக உழைத்து சொந்த வீட்டைப் பெறுகிறார்கள், சிலர் எவ்வளவு உழைத்தாலும் சொந்த வீட்டை பெற முடிவதில்லை. சிலரோ கடினமாக உழைக்காமலேயே சொந்த வீட்டைச் சொந்தமாக்குவதில் சிலர் வெற்றி பெறுகிறார்கள்.
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடத்தை தெரிந்து கொள்வதன் மூலம், சொந்த வீடு கட்டும் யோகங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதன்படி 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்குசொந்த வீடு கட்டும் அல்லது வாங்கும் அதிர்ஷ்டம் உள்ளது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
2024ல் மேஷ ராசிக்காரர்கள் வீடு வாங்குவதில் வெற்றி பெறலாம். நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்பினாலோ அல்லது வாங்க முயன்றாலோ நீங்கள் அதில் வெற்றி பெறலாம். மே மாதத்திற்குப் பிறகு, மேஷ ராசிக்காரர்களுக்கு நிலம், சொத்து அல்லது புதிய வீடு வாங்குவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
ஆண்டின் தொடக்கத்தில், ஒரு சொத்து தொடர்பான விவாதம் தொடங்கலாம் மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், நீங்கள் ஒரு சொத்தை சேர்ப்பதில் வெற்றி பெறலாம். ஒருவேளை நீங்கள் இந்த சமயத்தில் வாங்க முடியாவிட்டால், ஜூன் முதல் ஜூலை நடுப்பகுதி வரை உங்களுக்கான அதிர்ஷ்டகாலமாக இருக்கும். அப்போது உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்
சனிபகவான் அருளால் ரிஷப ராசிக்காரர்கள் 202340-ல் சொந்த வீட் வாங்க வாய்ப்புள்ளது. நான்காம் வீட்டில் சனி இருப்பது உங்கள் நிலத்தில் வீடு கட்ட உதவும். சனிபகவானின் அருளால் இந்த யோகம் வருடம் முழுவதும் இருக்கும்.
எனவே, நீங்கள் முயற்சி செய்தால், பல ஆண்டுகளாக நீடிக்கும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உங்கள் வீட்டைக் கட்ட முடியும். மார்ச் முதல் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலம் புதிய சொத்து வாங்குவதற்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
கடகம்
2024-ல் புதிய வீடு வாங்க விரும்பும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும் அல்லது வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சரியான வாய்ப்பைத்தரும்.
ஜனவரி முதல் மார்ச் வரை, நீங்கள் ஒரு சொத்து வாங்குவதில் வெற்றி பெறலாம். இந்த சொத்து ஒரு அழகான இடத்தில் அமைந்திருக்கும் மேலும் எந்த ஒரு கோயில் அல்லது ஒரு மத ஸ்தலமும் அருகில் அமைந்திருக்க யோகங்கள் உள்ளன, இது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் மங்களகரமானது.
மேலும் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நீங்கள் எந்த பெரிய சொத்தை வாங்குதல்-விற்பதன் மூலம் லாபம் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2024ல் புதிய வீடு கட்டும் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். 2024ல் வீடு வாங்கும் நல்ல நேரத்தின்படி, ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2024க்குள் பெரிய சொத்துக்களை வாங்கி வெற்றி பெறலாம். இதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
2024 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான இக்காலக்கட்டத்தில் சொத்து வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் லாபம் ஈட்டும் யோகங்கள் உருவாகி பொருளாதார நிலையை வலுப்படுத்துவீர்கள். இது உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ஒரு வீட்டை வாங்குவதற்கு ஜனவரி மாதம் சிறந்ததாக இருக்கும், மேலும் இந்த மாதத்தில் நீங்கள் ஒரு பெரிய சொத்தை வாங்கலாம். அரசுத் துறையிலும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் புதிய சொத்து வாங்குவதில் வெற்றி கிடைக்கும். மீதமுள்ள நேரத்தில், சொத்து வாங்குவது சாதகமாக இருக்காது. குறிப்பாக, மார்ச் முதல் மே வரை சொத்து வாங்குவதை நிறுத்துங்கள், ஏனெனில் அதில் ஏதேனும் சட்ட தடைகள் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications

