Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
2024-ல் இந்த 5 ராசி ஆண்கள் அனைவரின் இதயத்தையும் திருடும் மன்மதனமாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2024: அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்பது பொதுவாக எல்லோரின் ஆசையாக இருக்கும், ஆனால் அனைவருக்கும் இந்த ஆசை நிறைவேறுவதில்லை. ஒருவர் எப்போது வசீகரமானவராக மாறுவார் என்று யாராலும் கூறமுடியாது. ஏனெனில் வசீகரம் என்பது தோற்றத்தால் மட்டும் வருவதல்ல.
2024-ஆம் ஆண்டில் கிரக நிலைகள் சில ராசிகளில் பிறந்த ஆண்களை வசீகரமானவர்களாக மாற்றப் போகிறது. தங்களின் வசீகரத்தாலும், தவிர்க்க முடியாத கவர்ச்சியாலும் இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் பலரின் இதயத்தை திருடப்போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிஆண்கள் 2024-ல் வசீகரமானவர்களாக மாறப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
2024 ஆம் ஆண்டில் மிகவும் கவர்ச்சிகரமான இராசியாக மாறுவதில் மேஷ ராசிக்காரர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். தைரியம் மற்றும் சாகச மனப்பான்மைக்கு பெயர் பெற்ற மேஷ ராசிக்காரர்கள் வசீகரமாக இருக்கும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.
வாழ்க்கை மற்றும் அன்பிற்கான அவர்களின் அச்சமற்ற அணுகுமுறை அவர்களை தவிர்க்கமுடியாதவர்களாக மாற்றுகிறது, மேலும் மற்றவர்களை அவர்களின் பாதையில் எளிதாக இழுக்கிறது. நீங்கள் ஒரு தைரியமான மற்றும் ஆற்றல் மிக்க ஆளுமையால் வசீகரிக்கப்படுவதைக் கண்டால், அவர்கள் நிச்சயம் மேஷ ராசிக்காரர்களாக இருப்பார்கள்.
துலாம்
வசீகரம் மற்றும் கருணை நிறைந்த, துலாம் ராசி ஆண்கள் 2024-ல் வசீகரமானவர்களாக மாறப்போகிறார்கள். அன்பு மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும், துலாம் ராசி ஆண்கள் இராஜதந்திரம் மற்றும் நேர்த்தியின் உள்ளார்ந்த உணர்வைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் வசீகரம் உறவுகளில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் உருவாக்கும் திறனில் உள்ளது,இது அவர்களை அனைவரும் விரும்புபவர்களாக மாற்றுகிறது. அழகியல் உணர்வும், இயற்கையான காதல் உணர்வும் கொண்ட ஒரு ஆணிடம் நீங்கள் மயங்கினால், அவர் நிச்சயம் துலாம் ராசி ஆணாகத்தான் இருப்பார்கள்.
சிம்மம்
2024 ஆம் ஆண்டில் மிகவும் கவர்ந்திழுக்கும் ராசிகளில் ஒருவராக சிம்ம ராசிக்காரர்கள் இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்கள், மேலும் அவர்களின் காந்த ஆளுமை மக்களை சிரமமின்றி அவர்களை நோக்கி ஈர்க்கிறது.
தாராளமான இதயம் மற்றும் கம்பீரத்துடன், சிம்ம ராசி ஆண்கள் எங்கு சென்றாலும் அழியாத அடையாளத்தை விட்டுச் செல்கிறார்கள். நீங்கள் ஒரு அரச கம்பீரம் மற்றும் உணர்ச்சி நிரம்பிய இதயம் கொண்ட ஒருவரிடம் ஈர்க்கப்பட்டால், அவர்கள் சிம்மம் ராசி ஆண்களாக இருப்பார்கள்.
மிதுனம்
2024 ஆம் ஆண்டில் மிதுன ராசி ஆண்கள் தங்களின் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் ஈர்ப்பார்கள். தகவல்தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் ஈடுபாட்டுடன் பேசும் பாணியைக் கொண்டுள்ளனர்.
எந்தச் சூழலுக்கும் ஏற்றாற்போல், உரையாடலை விறுவிறுப்பாக வைத்திருக்கும் திறன் அவர்களைக் கூட்டத்தில் தனித்து நிற்கச் செய்கிறது. உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் வசீகரத்தால் உங்கள் மனதைத் தூண்டக்கூடிய ஒரு மனிதனிடம் நீங்கள் விரும்பினால், அது மிதுன ராசி ஆண்களாக இருப்பார்கள்.
மீனம்
2024 ஆம் ஆண்டில் மிகவும் கவர்ச்சிகரமான ஆண்களின் ராசிகளில், மீன ராசி ஆண்கள் அவர்களின் மயக்கும் மற்றும் கனவுகள் நிறைந்த கவர்ச்சியால் முக்கிய இடத்தைப் பெறுகிறது. கனவுகள் மற்றும் கற்பனையின் கிரகமான நெப்டியூன் ஆளப்படும், மீனம் ஆண்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை வசீகரிக்கும் ஒரு மாய அழகை வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்களின் உணர்திறன் மற்றும் இரக்க குணம் அவர்களை இயற்கையான பச்சாதாபங்களை உருவாக்குகிறது, மற்றவர்களுடன் ஆழமான தொடர்புகளை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு மென்மையான இதயம் மற்றும் இரக்கம் நிறைந்த இதயம் கொண்ட ஒருவரிடம் நீங்கள் ஈர்க்கப்பட்டால், அது மீன ராசிக்காரராக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












