Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உலகின் முதல் தொலைக்காட்சியை உருவாக்கியவர் யார்? அதில் ஒளிபரப்பப்பட்ட முதல் நிகழ்ச்சி என்ன தெரியுமா?
உலகின் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் முக்கியமான பொருளாக தொலைக்காட்சி மாறிவிட்டது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட தொலைக்காட்சி மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும். மக்களின் வாழ்க்கையை தொலைக்காட்சியின் வருகைக்கு முன் மற்றும் வருகைக்குப் பின் என்று பிரித்து விடலாம்.
நம் அனைவருக்குமே தொலைக்காட்சிகள் மூலம் எண்ணற்ற நினைவுகளும், அனுபவங்களும் கிடைத்திருக்கும். உண்மையில், தொலைக்காட்சி நம் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு தொலைக்காட்சியாவது உள்ளது.

நம் வாழ்க்கையையே மாற்றிய தொலைக்காட்சி எப்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, யார் அதைக் கண்டுபிடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் தினமும் தொலைக்காட்சியை பார்க்கிறோம், ஆனால் அதை கண்டுபிடித்தது யார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இந்த பதிவில் முதல் தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார் மற்றும் தொலைக்காட்சியின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தொலைக்காட்சியின் அர்த்தம்
தொலைக்காட்சி என்பது ஒலியுடன் கூடிய காட்சிப் படங்களை மின் சமிக்ஞைகளாக மாற்றி, அவற்றை வானொலி அல்லது பிற வழிகளில் கடத்தி, அவற்றை மின்னணு முறையில் திரையில் காண்பிக்கும் ஒரு அமைப்பாகும்.
தொலைக்காட்சியை வடிவமைத்தவர் யார்?
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஏனெனில் உலகின் பல்வேறு பகுதிகளில் தொலைக்காட்சியை உருவாக்குவதில் பல ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வந்தனர். தொலைக்காட்சியின் முதல் செயல்பாட்டு மாதிரியை ஜான் லோகி பெயர்ட் மற்றும் ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் ஆகியோர் நிரூபித்தனர். உலகின் முதல் முழுமையாக செயல்படும் இயந்திர தொலைக்காட்சியை ஜான் லோகி பெயர்ட் கண்டுபிடித்தார், மேலும் ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் முழுமையாக செயல்படும் மின்னணு தொலைக்காட்சி அமைப்பைக் கண்டுபிடித்தார்.
முக்கியமாக ஜெர்மன் ஆராய்ச்சியாளர் பால் நிப்கோவ் ஆகும், அவர் சுழலும் வட்டுகளைப் பயன்படுத்தி முதல் இயந்திர தொலைக்காட்சியை உருவாக்கி, தொலைக்காட்சியின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்தார். இந்த சுழலும் வட்டுகள் பின்னர் நிப்கோ வட்டு என்று அழைக்கப்பட்டன.
முதல் தொலைக்காட்சி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி ஒரு மெக்கானிக்கல் தொலைக்காட்சியாகும், இது 1926 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் கண்டுபிடிப்பாளரும் மின் பொறியாளருமான ஜான் லோகி பெயர்டால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், முதல் முழுமையாக செயல்படும் மின்னணு தொலைக்காட்சியை ஃபிலோ டெய்லர் ஃபார்ம்ஸ்வொர்த் செப்டம்பர் 7, 1927 அன்று கண்டுபிடித்தார். மேலும் 1938 ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படும் மின்னணு தொலைக்காட்சியை வணிகரீதியாக தயாரித்ததால், அவர் தொலைக்காட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
Television என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?
"Television" என்ற வார்த்தையை ரஷ்ய விஞ்ஞானி கான்ஸ்டான்டின் டிமிட்ரிவிச் பெர்ஸ்கி 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற 1-வது சர்வதேச மின்சார மாநாட்டில் சமர்ப்பித்த ஒரு ஆய்வறிக்கையில் உருவாக்கினார். இந்த கட்டுரை பிரெஞ்சு மொழியில் வழங்கப்பட்டது.
முதலில் ஒளிபரப்பட்ட விளம்பரம் எது?
முதல் தொலைக்காட்சி விளம்பரம் ஜூலை 1, 1941 அன்று ஒளிபரப்பப்பட்டது. இது பிலடெல்பியா பிலிஸ் மற்றும் புரூக்ளின் டாட்ஜர்ஸ் இடையேயான பேஸ்பால் போட்டிக்கு சற்று முன்பு ஒளிபரப்பான புலோவா வாட்ச்களுக்கான 10 வினாடி விளம்பரமாகும். இந்த விளம்பரத்தின் விலை $9 மற்றும் WNBT (தற்போதைய WNBC) இல் ஒளிபரப்பப்பட்டது. விளம்பரத்தின் வாசகம் "America runs on Bulova time" என்பதாகும்.
தொலைக்காட்சி பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
- முதல் வண்ணத் தொலைக்காட்சி 1950 களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- விக்டோரியா மகாராணியின் அரசு இறுதிச் சடங்கு 4.1 பில்லியன் பார்வையாளர்களுடன் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது.
- 1969 ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்குவதை 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து நேரடியாகப் பார்த்தனர்.
- முதல் டிவி ரிமோட் கண்ட்ரோல் 1950 இல் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் ஜெனித் லேஸி போன்ஸ்.
- உலகில் நீண்ட காலமாக இயங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி "மீட் தி பிரஸ்" ஆகும், இது 1947 இல் தொடங்கப்பட்டு இன்றுவரை ஒளிபரப்படுகிறது.



Click it and Unblock the Notifications
