Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பூமியில் தங்கம் உருவாகி எத்தனை வருடமாகிறது? முதன் முதலில் தங்கம் எந்த சம்பவத்தால் உருவானது தெரியுமா?
இந்தியாவில் தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் பூமியில் உள்ள மிகவும் அரிதான உலோகங்களில் ஒன்றாகும். மனித நாகரிகம் உருவான காலம் முதலே அதன் வசீகரிக்கும் நிறம், அதிக மதிப்பு மற்றும் தூய்மைக்காக தங்கம் போற்றப்பட்டு வருகிறது. ஆய்வுகளின் படி, தங்கம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கம் நகைகள், நாணயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வளவு விலை மதிப்புள்ள மற்றும் பயனுள்ள தங்கம் உண்மையில் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பூமியில் கிடைக்கும் மற்ற கற்கள் மற்றும் கனிமங்களைப் போல தங்கம் பூமியின் மேற்பகுதியின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. தங்கத்தின் தோற்றம் நமது கிரகம் தோன்றுவதற்கு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிகவும் சக்திவாய்ந்த அண்ட நிகழ்வுகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
நியூட்ரான் நட்சத்திர மோதல்கள்
இன்றுவரை தங்கத்தின் உருவாக்கம் பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரபலமான கோட்பாடு நியூட்ரான் நட்சத்திர மோதல்களே ஆகும். நியூட்ரான் நட்சத்திரங்கள் என்பவை இறந்த நட்சத்திரங்களின் அதி அடர்த்தியான பொருளாகும். இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும்போது, அந்த நிகழ்வு அபரிமிதமான ஆற்றலையும் கனமான தனிமங்களையும் வெளியிடுகிறது. இந்த மோதல்களின் பொது தங்கம், பிளாட்டினம் மற்றும் யுரேனியம் போன்றவை உருவாகின்றன. சில வினாடிகளில் பெரும் அளவு தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தனிமங்கள் விண்வெளி முழுவதும் வீசப்படுகின்றன.
தங்கம் பூமிக்கு எப்படி வந்தது?
பிரபஞ்சத்தில் உருவான பிறகு, தங்கம் விண்வெளியில் தூசியாக மாறியது. மெதுவாக, அந்த தூசி நட்சத்திரங்களையும் கோள்களையும் உருவாக்கிய மேகங்களுடன் கலந்தது. பின்னர், பூமியின் உருவாக்கத்தின் போது தங்கம் பூமிக்குள் நுழைந்தது. அதுமட்டுமின்றி, விண்கற்களும் தங்கத்தை பூமிக்குக் கொண்டு வந்தன. இறுதியாக, தங்கம் பூமியின் மேலோட்டில் இருப்பதுடன், அதன் மிக ஆழமான பகுதிகளிலும் காணப்படுகிறது.
பூமியின் வரலாற்றில் தங்கத்தின் பயணம்
பூமி உருவானபோது ஆரம்ப நிலையில் முற்றிலும் உருகிய நிலையில் இருந்தது, இதனால் மேலும் தங்கம் உட்பட பெரும்பாலான கன உலோகங்கள் அதன் மையப்பகுதிக்குச் சென்றன. அதைத் தொடர்ந்து, எரிமலை வெடிப்புகள் மற்றும் விண்கல் மோதல்கள் தங்கத்தைப் புவி மேற்பரப்பிற்குக் கொண்டு வந்தன, இறுதியாக அது மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தின் விலை ஏன் அதிகமாக உள்ளது?
தங்கத்தின் விலை அதிகமாக இருக்க முதன்மையான காரணம் தங்கத்தை உருவாக்கும் அண்ட நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. நட்சத்திரங்களின் வெடிப்பு மூலம் பூமியை வந்தடைந்த தங்கத்தின் அளவு மிகவும் குறைவு. அதேசமயம் வேறுசில கிரகங்களுக்கு சென்ற தங்கத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. தங்கத்தைத் தோண்டி எடுப்பது கடினமானது மற்றும் அதை பிரித்தெடுப்பதும் மிகவும் கடினமான செயல்முறையாகும்.



Click it and Unblock the Notifications