Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க பிறந்த மாதத்தை சொல்லுங்க.. உங்களின் மறைந்திருக்கும் திறமை என்னன்னு சொல்றோம்...
Birth Month And Talents: ஒருவரது பிறந்த மாதமானது அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றி தெரியப்படுத்துவது மட்டுமின்றி, அந்நபரைப் பற்றி பல விஷங்களை தெரியப்படுத்தும் என்பது தெரியுமா? முக்கியமாக அந்நபருக்குள் மறைந்திருக்கும் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தும்.
நீங்கள் இதுவரை உங்களின் உண்மையான திறமை என்னவென்பதை தெரியாமல் இருந்தால் மற்றும் உங்களின் சிறப்புத் திறன்களை தெரிந்து கொள்ள விரும்பினால், உங்களின் பிறந்த மாதம் அதை தெரியப்படுத்தும்.

சொல்லப்போனால் ஒருவர் நல்ல வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அந்நபரின் உண்மையான திறமையை அறிந்து, அதன் வழி முயற்சித்தால், நிச்சயம் வாழ்வில் நல்ல உயரத்தை அடையலாம். இப்போது எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதிரியான திறனைக் கொண்டவர்கள் என்பதைக் காண்போம்.
ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் புதுமையான விஷயங்களை செய்வதில் வல்லவர்கள். எனவே இவர்களுக்கு கலைத் துறை மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த துறையில் இவர்கள் முயற்சித்தால், வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடைவார்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த உள்ளுணர்வு மற்றும் கற்பனை சிந்தனை கொண்டவர்கள். மனித உணர்ச்சிகள் மற்றும் வலுவான தனிப்பட்ட தொடர்புகள் பற்றிய மேம்பட்ட விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் உள்ளுணர்வுகளில் நம்பிக்கை வைத்து, உள்ளுணர்வு சொல்வதன் படி நடந்தால், சாதனை புரியலாம்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் இரக்கம் மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க திறமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதற்கான வலுவான பச்சாதாப உணர்வையும் உந்துதலையும் கொண்டுள்ளனர். உலகை சிறப்பாக மாற்றுவதற்கான உங்கள் விருப்பங்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் வலுவான பணி நெறிமுறை மற்றும் உறுதியான உறுதிப்பாட்டிற்காகப் பெயர் பெற்றவர்கள். அசைக்க முடியாத உந்துதலையும், போட்டித் தன்மையும் கொண்டதால், பல சாதனைகளை புரிவார்கள். இலக்குகளை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் சிறப்பான தகவல் தொடர்பு திறன்களைக் கொண்டிருப்பது தான் இவர்களின் ரகசிய திறமை. முக்கியமாக இவர்களிடம் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் பேச்சு இருக்கும். எனவே இவர்கள் பேச்சு தொடர்பான வேலையில் ஈடுபட்டால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவார்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். மேலும் இவர்கள் ஒரு விஷயத்தை விரைவில் கற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த துறையில் இருந்தாலும், அதில் சிறந்து விளங்குவார்கள். சவால்களை எதிர்கொண்டு, அதில் வெற்றி பெற்று காட்டுவார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் கவனித்துக் கொள்வதில் தனித்துவமான திறமையைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு அழகான சூழலை உருவாக்கி, அதில் மற்றவர்களை பாதுகாப்பாகவும், அன்பாகவும் உணர வைப்பார்கள். மொத்தத்தில் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தேவைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுப்பதில் வல்லவர்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டவர்கள். இவர்களின் தன்னம்பிக்கை மற்றும் இயற்கையான தலைமைத்துவ திறன்கள் மற்றவர்களை ஊக்குவிக்கும். எனவே உங்கள் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொண்டு, உலகில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.
செப்டம்பர்
பகுப்பாய்வு சிந்தனை மற்றும் விவரங்களுக்கு முழுமையான கவனம் செலுத்துவது ஆகியவை செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் மறைமுகமான திறமையாகும். இவர்கள எந்த வேலையை செய்தாலும், அதை திறம்பட செய்து முடிப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இன்னும் சிறப்பான பலனைப் பெற பகுப்பாய்வு திறன்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் ராஜதந்திரம் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதில் மிகுந்த திறமையைக் கொண்டவர்கள். நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், பொதுவான நிலையை அடையாளம் காணவும் கூடிய சிறந்த மத்தியஸ்தர்கள். இவர்கள் இராஜதந்திர திறன்களைப் பயன்படுத்திக் கொண்டால், இன்னும் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தீவிர தொலைநோக்கு பார்வையாளர்கள். வலுவான உள்ளுணர்வு கொண்டவர்கள். எதிலும் மிகுந்த ஆர்வத்தை கொண்டவர்கள் மற்றும் உடைக்க முடியாத மன உறுதியையும் கொண்டவர்கள். தங்கள் கனவை அடைய வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பார்கள். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து எடுப்பார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கை வழிகாட்டிகள். இவர்களின் சிறப்பான திறமை என்றால் அது வழிகாட்டுதலில் சிறப்புத் திறமையைக் கொண்டிருப்பது தான். அனுபவம் மற்றும் ஞானத்தின் காரணமாக சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள். மொத்தத்தில் இவர்கள் தங்கள் அறிவை வழங்கி மற்றவர்களுக்கு அவர்களின் நோக்கங்களை அடைய உதவுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











