Latest Updates
-
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன?
ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போன்று சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து செய்த இந்திய கிரிகெட் வீரர்கள்!
Hardik Pandya Natasa Stankovic Divorce: தற்போது இணையத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது காதல் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்யப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடாஷா ஹர்திக் பாண்டியாவின் 70 சதவீத சொத்தை கைப்பற்றி விவாகரத்து பெற்றவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுப்போன்று ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சைக்குரிய விவாகரத்து செய்துள்ளார்கள். இப்போது அந்த கிரிக்கெட் வீரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜியை முதன்முதலாக ஃபேஸ்புக்கில் சந்தித்து, 2012 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆஷா முகர்ஜிக்கு இது இரண்டாது திருமணம் மற்றும் இவருக்கு முதல் கணவருடன் 2 மகள்கள் உள்ளனர். ஆனால் ஷிகர் தவானுக்கோ இது முதல் திருமணம். இவ்விருவருக்கும் ஒரு மகன் உள்ளார். ஆஷா மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார் மற்றும் இந்தியாவிற்கு வரவும் மறுத்ததோடு, ஷிகரை மகனிடம் இருந்து பிரித்து வைத்தார். 2023 ஆம் ஆண்டில், டெல்லி நீதிமன்றம் ஷிகர் தவானுக்கு ஆஷாவால் இழைக்கப்பட்ட மனக்கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து வழங்கியது.
தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது குழந்தைப்பருவ தோழியான நிகிதா வஞ்சராவை 2012-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இத்திருமணம் நிலைத்திருக்கவில்லை. நிகிதாவிற்கு தினேஷின் சக வீரரான முரளி விஜய்யுடன் தொடர்பு இருப்பதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இது இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு வழிவகுத்தது. பின் 2015-ல் தினேஷ் கார்த்திக் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கலை திருமணம் செய்து கொண்டார். 2021-ல் இத்தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
வினேத் காம்ப்ளி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி தனது சிறுவயதில் இருந்தே தோழியாக இருந்த நோயெலா லூயிஸை முதலில் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் 2005-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் வினோத் காம்ளி முன்னாள் மாடலான ஆண்ட்ரயா ஹெவிட்டை திருமணம் செய்து கொண்டார். இதற்காக வினோத் கிறிஸ்துவ மதத்திற்கும் மாறினார். இத்தம்பதியருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
மொஹமத் அசாருதீன்
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான மொஹமத் அசாருதீனின் தனிப்ட்ட வாழ்க்கை சற்று சர்ச்சை நிறைந்தது. இவர் முதலில் நவ்ரீனை மணந்தார் மற்றும் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் 1996 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியை திருமணம் செய்வதற்காக நவ்ரீனை விவாகரத்து செய்தார். ஆனால் அவர்களும் திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின் முகமது அசாருதீன் விளையாட்டு பிரபலங்களான ஜ்வாலா குட்டா, ஷானன் மேரி போன்றோருடன் கிசுகிசுக்கப்பட்டார்.
முகமது ஷமி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், அவர் மீது 2018 ஆம் ஆண்டில் குடும்ப துஷ்பிரயோகம் மற்றும் விபச்சார வழக்கு பதிவு செய்தார். இருப்பினும் முகமது ஷமி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, பொய்யானவை என்றும், தனது பெயரை கெடுப்பதற்காக சதி செய்வதாகவும் கூறினார். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பல காரணங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். இவர் 1980-ல் நடிகை அம்ரிதா சிங்குடன் டேட்டிங்கில் இருந்ததோடு, அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. அதன் பின் இவர்கள் இருவரும் தனியே பிரிந்து அவரவர் வாழ்க்கையில் முன்னேறினர். அதன் பின் ரவி சாஸ்திரி ரிது சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிது சிங் ஒரு டாக்டர் மட்டுமின்றி, கிளாசிக்கல் நடன கலைஞரும் கூட. ஆனால் 22 ஆண்டுகளுக்கு பின், 2012-ல் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். அதன் பின் 2018-ல் ரவி சாஸ்திரி நடிகை நிம்ரத் கவுருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இதை இவர்கள் இருவரும் மறுத்தனர்.



Click it and Unblock the Notifications











