Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Pongal Wishes In Tamil: பொங்கல் அன்று உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இப்படி வாழ்த்து சொல்லுங்க.. சந்தோஷபடுவாங்க!
Pongal Wishes In Tamil: அனைவரும் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட தயாராகிக் கொண்டிருப்போம். அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, உலகில் உள்ள தமிழர்களால் உலகில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பண்டிகை இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் இந்த பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது விவசாயத்திற்கு உதவிய சூரியன், ஆடு, மாடு போன்றவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் பண்டிகை அன்று உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மனதை கவரும் வகையில் அழகாக வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால், கீழே உங்களுக்காக சில அழகான பொங்கல் வாழ்த்து கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து அனுப்பி, மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
1. தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
2. அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்!
3. இன்பம் பொங்கி வழியட்டும்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
4. வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்..
வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்..
அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்..
அனைத்தும் பொங்க
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
5. இன்பம் பொங்கி
துன்பம் அணையட்டும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
6. இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
7. அன்பும் ஆசையும் பொங்க..
இன்பமும் இனிமையும் பொங்க..
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க..
பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்!
8. சூரியன் தன் ஒளிக் கற்றை
இந்த பூமியின் மீது
செலுத்துவதைப் போன்று
வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
9. பொங்கலை போல உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும்
செல்வமும் பொங்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
10. தைத்திருநாளில்
வளமுடன் வாழ, அன்பு பொங்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications









