Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Ganesh Chaturthi Wishes: விநாயகர் சதுர்த்தி அன்று உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இப்படி வாழ்த்துக்கள சொல்லுங்க..
Ganesh Chaturthi 2025 Wishes In Tamil: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை வந்துவிட்டது. முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் இவ்வுலகில் அவதரித்த தினம் தான் விநாயகர் சதுர்த்தி. இந்நாளில் மக்கள் விநாயகர் சிலையை வாங்கி வந்து, விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அவல், பொரி போன்றவற்றை படைத்து வழிபாடு செய்வார்கள்.
முக்கியமாக இந்த விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது மற்றும் இந்த கொண்டாட்டம் அடுத்த 10 நாட்கள், அதாவது செப்டம்பர் 05 ஆம் தேதி வரை இருக்கும்.

பொதுவாக பண்டிகை வந்தாலே, முதலில் தங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு வாழ்த்துக்களைத் தான் முதலில் தெரிவிப்போம். அந்த வகையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால், கீழே உங்களுக்காக சில அற்புதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வெற்றி விநாயகர் புதிய வெற்றிகளை குவித்து, உங்களை வளப்படுத்தட்டும்!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
2. நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
3. அருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்!
எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
4. முழு முதற் கடவுள் கணபதி உங்களுக்கு எல்லா வளமும் தரட்டும்!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
5. காக்கும் கடவுள், கணேசனை நினை!
கவலைகள் அகல அவன் அருள் துணை!
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
6. விநாயகனின் ஆசிகள் உங்கள் பாதையை பிரகாசமாக்கி வெற்றிக்கு இட்டுச் செல்லட்டும்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
7. விநாயகர் உங்கள் வீட்டில் செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் நிரப்பட்டும்..
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
8. விநாயகரின் அருளால், உங்கள் ஒவ்வொரு கனவும் நனவாகட்டும்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications







