Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Bhogi Wishes In Tamil: போகி அன்று உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இப்படி வாழ்த்து அனுப்புங்க.. சந்தோஷப்படுவாங்க..
Bhogi Wishes In Tamil: தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முதல் நாள் தான் போகிப் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி தினம் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை பொங்கல் பண்டிகையின் முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த போகிப் பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை அடிப்படையாக கொண்டது தான் இந்த பண்டிகை.

இந்நாளில் மக்கள் வீட்டில் உள்ள உபயோகமில்லாத பழைய பொருட்களை தூக்கி எறிந்து, வீட்டை சுத்தப்படுத்துவார்கள். மேலும் பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களை அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது போகி பண்டிகையில் உள்ள தத்துவமாகும்.
இந்த ஆண்டு போகி பண்டிகையானது ஜனவரி 14 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த போகி நாளில் மக்கள் வீட்டை சுத்தம் செய்வது மட்டுமின்றி, நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருக்கு தங்களின் அன்பு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். நீங்கள் இந்த போகி பண்டிகையன்று உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களை அனுப்புங்கள்.
1. தீய எண்ணங்களை எரித்து
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்..
போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்!
2. கஷ்டங்களை கழித்து
மகிழ்ச்சியை புகுத்தி
கொண்டாடுவோம் இந்த
போகி பண்டிகையை..
இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
3. பழைய கவலைகளை தீமூட்டி
புதிய கனவுகளை மெருகேற்றுவோம்..
இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துகள்!
4. பழையன கழிதலும்
புதியன புகுதலும்
போகி பண்டிகை ஆகும்.
இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
5. புதியதில் நேர்மையை
பின்பற்றி நடப்போம்..
உண்மை ஜெயித்திட
உண்மையாய் உழைப்போம்..
தீமையை தீயிட்டு
சுத்தமாய் அழிப்போம்..
இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
6. தீமைகள் விலகி
நன்மைகள் பெருகிட
இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications





