Latest Updates
-
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
Hanuman Jayanti 2024: தைரியம், வீரம், துணிச்சல், குறும்புத்தனம் ஆகியவற்றிற்கு பெயர்பெற்றர் தான் அனுமன். வாயுபுத்திரனான அனுமன் பிறந்தநாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 23 ஆம் தேதி, அதாவது இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த அனுமன் ஜெயந்தி வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் பிறந்த நாளின் அனுமனை வழிபடுவதன் மூலம், விஷேசமான பலன்கள் கிடைக்கும்.

அனுமன் ஜெயந்தி நாளான இன்று ரவி யோகம், சித்திரை நட்சத்திரமும் வருகிறது. அதே சமயத்தில் இந்நாளில் பல சுப யோகங்களும் உருவாகியுள்ளன. அதுவும் பஞ்சகிரக யோகம், புதாதித்ய யோகம், மாளவ்ய ரஜயோகம், சச ராஜயோகம் ஆகியவை உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். அதோடு அனுமனின் ஆசியும் இவர்களுக்கு கிடைக்கும். இப்போது அனுமன் ஜெயந்தி நாளில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
அனுமன் ஜெயந்தி நாளில் உருவாகியுள்ள ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்கள் அனுமனின் ஆசியைப் பெறுவார்கள். மேலும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். அனுமனின் ஆசியால் நினைத்த காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வேலை தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனின் சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதலிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அனுமனின் அருளால் நீண்ட கால நோயில் இருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனுமன் ஜெயந்தியானது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அனுமனின் ஆசியால் தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால் அல்லது முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். அனுமனின் ஆசையால் பணியிடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
