Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இன்னிக்கு உங்க ராசிப்படி அனுமனுக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்...
Hanuman Jayanti 2024: இந்து மதத்தில் அனுமன் ஜெயந்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பண்டிகையாகும். இந்த நாளில் தான் அனுமன் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த அனுமன் ஜெயந்தி இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் அனுமன் ஜெயந்தியானது, தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை திதி மற்றும் மூல நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி ஜனவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அனுமன் ராமரின் தீவிர பக்தர் மற்றும் இவர் மிகவும் வலிமையானவர், விசுவாசமானவர் மற்றும் புத்திசாலி. இந்த அனுமனின் ஆசியைப் பெற வேண்டுமானால், ராம நாமத்தை உச்சரித்து வந்தாலே போதும் என்பர். பலர் அனுமன் ஜெயந்தி நாளில் விரதமிருந்து அனுமனை வழிபடுவர்.
ஜோதிடத்தில் அனுமனின் ஆசியை பெற, ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற பொருட்களை வாங்கி அனுமனுக்கு படைத்து வழிபட்டு வந்தாலே போதும். இப்போது அனுமன் ஜெயந்தி நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருட்களை அனுமனுக்கு படைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி செவ்வாய். எனவே இந்த ராசிக்காரர்கள் அனுமனின் அருளைப் பெற உளுத்தம் பருப்பாலான லட்டுகளை படைத்து வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அனுமன் மகிழ்ச்சியடைந்து, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி முன்னேற்றத்திற்கு அருள் புரிவார்.
ரிஷபம் மற்றும் துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் அனுமனுக்கு துளசி விதைகள் மற்றும் மோத்திச்சூர் லட்டுகளைப் படைத்து வழிபடுவது நல்லது. இப்படி செய்வதனால் அஞ்சனையின் மகன் அனுமன் வாழ்வில் உள்ள கஷ்டங்களை உடைந்தெறிந்து, மகிழ்ச்சியையும், செழிப்பையும் பெற வழிவகை செய்வார்.
மிதுனம் மற்றும் கன்னி
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி புதன். இந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள் அனுமனுக்கு பூந்தியை படைத்து வழிபடுவதோடு, அனுமன் சாலிசாவை 108 முறை பாராயம் செய்ய வேண்டும். இப்படி செய்வதனால் அனுமனின் ஆசி கிடைப்பதோடு, வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பாலால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரங்களை அனுமனுக்கு படைத்து வழிபடுவதன் மூலம், அனுமனின் அருளைப் பெறலாம். அதோடு, இப்படி செய்வதன் மூலம், வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசியை சேர்ந்தவர்கள் அனுமனின் ஆசியை பெற விரும்பினால், ஜிலேபியை படைத்து வழிபடுங்கள். அதோடு அனுமன் அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, நேர்மறை ஆற்றல் நிரம்பி, வாழ்க்கையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணலாம்.
தனுசு மற்றும் மீனம்
தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் அனுமனுக்கு உளுத்தம் பருப்பு மற்றும் கிராம்புகளை படைத்து வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அனுமனின் ஆசியைப் பெறலாம். மேலும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களை அனுமன் வழங்குவார்.
மகரம் மற்றும் கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். எனவே இந்த ராசியை சேர்ந்தவர்கள் அனுமனுக்கு மோத்திச்சூர் லட்டுகளைப் படைத்து வழிபடுவது நல்லது. இப்படி செய்வதன் மூலம், அனுமனின் ஆசி கிடைப்பதோடு, ஏழரை சனியின் தாக்கமும் சற்று குறையும். மேலும் எப்பேற்பட்ட சூழ்நிலையையும் கையாளும் தைரியத்தை அனுமன் வழங்குவார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











