Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க... இல்லனா சொட்டைதான் வரும்...!
Hair Care Tips: முடி உதிர்வும், அதை கையாள்வதும் நம்மில் பலர் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் சந்திக்கும் மோசமான அனுபவமாக இருக்கும். முடி உதிர்வு பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. அதற்காக அடிக்கடி முடிக்கு பயன்படுத்தும் பொருட்களை மாற்றுவது எப்போதும் அதற்கான தீர்வாக இருக்காது. பெரும்பாலும், தொடர்ந்து முடி உதிர்வது, ஊட்டச்சத்து குறைபாடுகளால் உரோமக்கால்கள் பலவீனப்படுவதன் விளைவாக இருக்கலாம்.
அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியமான ஒன்றாகிறது. ஆச்சரியப்படும் விதமாக, சில மோசமான உணவுப் பழக்கங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மட்டுமல்ல, முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கின்றன. முடி உதிர்வு நம்மை ஆளாக்கும் சில மோசமான உணவுப் பழக்கங்களை இங்கு பார்க்கலாம்.

போதுமான புரதம் உட்கொள்ளாதது
உடலில் தினசரி தேவைக்கு ஏற்ப புரதத்தை உணவில் சேர்க்காமல் இருப்பது தொடர்ச்சியான முடி உதிர்தலுக்கு ஒரு பொதுவான காரணியாக அமைகிறது. முடியின் முதன்மைக் கூறான கெரட்டின் ஒரு புரதம் என்பதால், உங்கள் உணவில் போதுமான புரதம் இல்லாமல் இருந்தால் முடி உதிர்வு அபாயம் அதிகரிக்கிறது. இந்த சிக்கலை தீர்க்க புரதங்கள், பருப்பு வகைகள், கீரை, பீன்ஸ் மற்றும் டோஃபு ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்ப்பதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகள்
அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகளால் உடலில் ஏற்படும் அழற்சியின் காரணமாக முடி உதிர்தலுக்கு வழிசெய்கிறது. இந்த அழற்சியினால் ஏற்படும் வீக்கம் மயிர்க்கால்களை தொந்தரவு செய்வதால் முடி உதிர்தலை அதிகரிக்க செய்கிறது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது முடியின் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் தக்கவைக்க உதவுகிறது.
அதிக கிளைசெமிக் உணவுகளை உட்கொள்வது
உடலில் இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன் அளவை உயர்த்துவதில் அதிக கிளைசெமிக் உணவுகள் முக்கிய பங்காற்றுவதன் மூலம் முடியின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை அல்லது கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகள் இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன் அளவை அதிகரிக்க வழிவகுப்பதால், இது உங்கள் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
முடி உதிர்வதைத் தடுக்க அதிக கிளைசெமிக் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அதன் அளவை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
போதுமான துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து உட்கொள்ளாதது
உணவில் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தை போதுமான அளவில் உட்கொள்வதை புறக்கணிப்பதும் அதிகப்படியான முடி உதிர்தலுக்கு வகை செய்கிறது. இந்த இரண்டு கூறுகளும் கெரட்டின் உருவாவதில் முக்கிய காரணியாக செயல்பட கூடியவை, மேலும் போதுமான இரும்புச்சத்து உடலுக்கு கிடைக்காத போது, உரோமக்கால்களுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடுகிறது, இதன் விளைவாக வலிமை குறைந்து மெலிந்து முடி உதிர்கிறது.
கடல் உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது அல்லது நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் பீன்ஸைத் தேர்ந்தெடுப்பது இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவலாம்.
கொழுப்பு அமிலங்களின் பற்றாக்குறை
முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உங்கள் உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்த அத்தியாவசியம் நிறைந்த ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை போதுமான அளவில் சாப்பிடாமல் இருப்பது பலவீனமான மற்றும் வறண்ட முடிக்கு வழிவகுக்கும், இதனால் முடி உடைவது மற்றும் முடி உதிர்தல் போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது. உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை ஆதரிக்க மீன், ஆளி விதைகள், மற்றும் வால்நட் பருப்புகள் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் ஆதாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கங்களை கண்டறிவதும், அதனை சரிசெய்வதும் முடி உதிர்வதைத் தடுக்கவும் நிர்வகிக்கவும் உதவியாக இருக்கும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய நன்கு சமநிலையான டயட்க்கு முன்னுரிமை அளிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், உங்கள் தலைமுடி உதிர்வை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முக்கியமானதாகும்.



Click it and Unblock the Notifications
