Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
30 வயசுக்குள்ள நீங்க பெரிய பணக்காரர் ஆகணுமா? அப்ப 'இந்த' 5 விஷயங்கள கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
பணக்கார வாழ்க்கையை வாழ விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்? அந்த வாழ்க்கையை பெற முயற்சி செய்யாதவர்கள் இங்கு யார் இருக்கிறார்கள்? ஆனால், இது எல்லாராலும் சாத்தியமில்லை. உண்மையைச் சொன்னால், நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை உருவாக்க சரியான நிர்வாக செயல்பாடு அவசியம்.
இளம் வயதிலேயே பலர் அதிகம் பணம் சம்பாதித்து, பெரிய பணக்காரர் ஆகிறார்கள். அதேபோல, நீங்களும் இளம் வயதிலேயே பெரிய செல்வந்தராக வேண்டுமா? ஆம். எனில், அதற்காக சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். எப்போதும் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். நிதி நிலையை நீங்கள் சரியாக கையாள வேண்டும். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மெனக்கெட வேண்டும்.

இவை அனைத்தையும் உங்கள் வாழ்க்கையில் சேர்ப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கருத்தை படிப்படியாக மாற்றி, நீங்கள் எப்போதும் விரும்பும் ஒன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும். நீங்கள் பெரிய பணக்காரராக அல்லது செல்வந்தராக வளர உதவும் பழக்கவழக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இலக்கை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
மற்றவர்களுக்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி எப்போதும் பயணிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க விரும்புகிறீர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
இந்த விஷயங்களைத் திட்டமிடுவது, நீங்கள் எதை விரும்புகிறீர்கள் மற்றும் அவற்றை அடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முன் யோசனைகளை உங்களுக்கு வழங்கும்.
நீங்கள் சம்பாதிப்பதை விட எப்போதும் குறைவாகவே செலவிடுங்கள்
நீங்கள் செய்யும் வேலை அல்லது வணிகம் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும். இது நீங்கள் உயிர் வாழ்வதற்கான அடிப்படையாகும். அந்த பணத்தை வைத்துதான், உங்கள் வாழ்க்கையை நீங்கள் திட்டமிடுகிறீர்கள். எனவே, அந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே செலவழிக்க ஒரு இலக்கை உருவாக்குங்கள்.
உங்கள் மொத்த சம்பாத்தியத்தையும் உங்கள் நிகழ்காலத்திற்கே செலவழித்தால், எதிர்காலத்திற்காக உங்களால் எதையும் சேமித்து வைக்க முடியாது. இது பொருளாதார ரீதியாக சிக்கல்களில் உங்களை சிக்க வைக்கலாம். எனவே, நீங்கள் சம்பாதிப்பதை விட எப்போதும் குறைவாகவே செலவிடுங்கள், மீதமுள்ள பணத்தை சேமித்து வையுங்கள்.
வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சேமிக்கத் தொடங்குங்கள்
இன்றைய உலகில், சாதாரணமாக பணத்தை செலவழிக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதனடிப்படையில், மக்கள் தங்களிடம் இருக்கும் விஷயங்களில் பணத்தை செலவழிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் போதுமான அளவு பணம் இருக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட தொகையை சேமிப்பதில் அல்லது புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இது எதிர்காலத்தில் நீங்கள் நல்ல பொருளாதார ரீதியான வாழ்க்கையை பெற வழிவகுக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பணத்தை சேமிக்கத் தொடங்கினால், பண சிக்கல்களால் பாதிக்கப்படவோ, கவலைப்படவோ அவசியமில்லை.
உங்கள் பட்ஜெட்டின்படி செல்லுங்கள்
மிடில் கிளாஸ் என்றழைக்கப்படும், நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் பட்ஜெட் போட்டுதான் வாழ்க்கையை வாழுகிறார்கள். இல்லையென்றால், அவர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பட்ஜெட்டை உருவாக்கி, வாழ்க்கையை அதன்படி வாழ பழக்கமாக ஆக்குங்கள். இது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.
பட்ஜெட் படி வீட்டு நிர்வாகத்தை நீங்கள் பராமரிக்காமல் இருந்தால், அது பிற்காலத்தில் உங்களைப் பாதிக்கலாம். பட்ஜெட்டை உருவாக்குவது உங்களுக்காக ஒரு திட்டத்தை வடிவமைக்க உதவுகிறது. இது உங்கள் செலவினங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
நீங்கள் எந்த விஷயங்களில் பணத்தை குறைக்கலாம் அல்லது செய்யக்கூடாது என்பதை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. இது இறுதியில் பட்ஜெட் இல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை விட அதிக பணத்தை சேமிக்க உதவும். பொருளாதார ரீதியாக உங்களை வலுவாக்க பட்ஜெட் உங்களுக்கு உதவும்.
உங்கள் திறன்களை செம்மைப்படுத்துங்கள்
பணம் சம்பாதிக்க உதவும் ஒரே விஷயம் உங்கள் சொந்த திறமை மற்றும் அறிவு. நீங்கள் எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட திறன்களை பெற்றுள்ளீர்களோ, அவ்வளவு சிறப்பாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வழிநடத்துவீர்கள். வெவ்வேறு திறன்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் உங்களால் முடிந்த அளவு அறிவைப் பெறுங்கள்.
எப்போதும் கற்ற எந்தத் திறமையும் வீணாகாது. எப்பொழுதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் பணமாக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கான விஷயங்களைக் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் சமையலை விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு யூடியூப் சேனலை தொடங்கலாம் அல்லது உங்கள் சொந்த சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் எழுதலாம்.



Click it and Unblock the Notifications
