Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
குரு வக்ரமாவதால் செப்டம்பர் முதல் இந்த 3 ராசிக்காரங்க நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க போறாங்க..
Jupiter Retrograde In Aries 2023: ஜோதிடத்தில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். குரு பகவான் ராசியை மாற்றுவதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகும். இந்த குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியின் வக்ர நிலையில் மாறுகிறார். அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இப்படி வக்ர நிலையில் டிசம்பர் மாதம் வரை இருப்பார். அதன் முன்னோக்கி நேர்கதியில் பயணிப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் அனைத்து காரியங்களிலும் வெற்றிகளையும், நல்ல நிதி நன்மைகளையும் பெறுவார். அதுவே குரு பகவான் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.
முக்கியமாக பண பிரச்சனைகள் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு தொழில் வாழ்க்கையும் மோசமாக இருக்கும். இப்போது குரு வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் செப்டம்பர் முதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். தந்தையுடன் சில விஷயங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளால் பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். மிகுந்த பண பிரச்சனைகளை செப்டம்பர் முதல் சந்திக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தம்பதியர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். சில சமயங்களில் உறவுகளில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குடும்ப விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிரமமாக இருக்கும். நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். குரு பகவான் வக்ரமாவதால் பலர் இக்காலத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படலாம். குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











