ஜூனில் உதயமாகும் குரு: அடுத்த 1 வருடம் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கப் போகுது...

Guru Uday 2024 Jupiter Rise In Taurus 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அப்படி கிரகங்களின் நிலைகளில் அல்லது இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் மங்களகரமான கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இதுவரை குரு பகவான் வழங்கவுள்ள நற்பலன்களில் இருந்த தடைகள் நீங்கும்.

Guru Uday 2024 Jupiter Rise In Taurus 2024 These Zodiac Signs Wealth Will Increase

முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். இப்போது ரிஷப ராசியில் உதயமாகவுள்ள குரு பகவானால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அற்புதமாக இருக்கும். கூட்டு தொழிலால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்பினால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மொத்தத்தில் அடுத்த 1 வருடம் அற்புதமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. தந்தையிடமிருந்து நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படுவதோடு, நல்ல லாபத்தையும் தரும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். மாணவர்கள் முன்பை விட சிறப்பாக படிப்பார்கள். வெளிநாடு செல்ல ஆசை இருந்தால் அது நிறைவேறும். அடுத்த ஒரு ஆண்டு எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஜோதிடம், எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர்கள் போன்றோருக்கு குரு உதயமானது சிறப்பானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இதன் விளைவாக செல்வம் பெருகும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, May 28, 2024, 23:13 [IST]
Desktop Bottom Promotion