Latest Updates
-
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
ரிஷப ராசியில் உதயமாகும் குரு: ஜூன் முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Guru Uday 2024 Jupiter Rise In Taurus 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அஸ்தமனமாக உதயமாகவும் செய்யும். அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தேவர்களின் குருவான குரு பகவான் மே 01 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்தார். ரிஷப ராசியில் நுழைந்த 2 நாட்களிலேயே குரு அஸ்தமனமானார். இதனால் குருவினால் கிடைக்கவிருந்த நற்பலன்கள் தடைபட்டு வந்தன. இந்நிலையில் குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் உதயமாகவுள்ளார்.

ரிஷப ராசியில் உதயமாகும் குருவின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது ரிஷப ராசியில் உதயமாகும் குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் ஜூன் மாதம் முதலாக வெற்றிகரமாக நடைபெறும். மேலும் இக்காலத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
அதோடு புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். பணியிடத்தில் உங்களின் இலக்கை அடைய மேற்கொள்ளும் கடின உழைப்பு நல்ல வெற்றியைப் பெறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் ஜூன் முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இதனால் நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்று பெறுவீர்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே சமயம் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.
வேலையை மாற்ற விரும்புபவர்களின் ஆசை ஜூன் மாதத்திற்கு பின் நிறைவேறும். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை ஜூன் மாதத்திற்கு பின் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். நிதி ரீதியாக, மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications