Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
குரு புஷ்ய யோகத்தில் உதயமாகும் குரு பகவானால் இந்த 4 ராசிக்காரர்களின் செல்வம் பெருகும்..
Guru rise 2023: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவான் மேஷ ராசிக்குள் நுழையும் போது அஸ்தமன நிலையில் வலுவிழந்து இருந்தார்.
இந்நிலையில் 2023 ஏப்ரல் 27 ஆம் தேதி, அதாவது இன்று குரு மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். இந்நாளில் புஷ்ய (பூசம்) நட்சத்திரம் என்பதால், புஷ்ய நட்சத்திரத்தில் குரு உதயமாகிறார். ஏப்ரல் 27 ஆம் தேதி குரு புஷ்ய யோக நாளாகும்.

குரு புஷ்ய யோகம் என்றால் என்ன? வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாள். பூச நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குரு வியாழக்கிழமை அன்று பூச நட்சத்திரத்தில் அவதரித்ததால், வியாழக்கிழமைகளில் வரும் பூச நட்சத்திர தினமானது குரு புஷ்ய யோக நாளாகும்.
குரு புஷ்ய யோக தினமானது மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் குரு உதயமாயிருப்பதால், சில ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான வேலையால் பாராட்டைப் பெறுவார்கள். முக்கியமாக உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு இனி கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முக்கியமாக உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் வேலையை சிறப்பாக செய்ய முடியும். மேலும் வேலையை மாற்ற நினைத்தால், இனிமேல் மேற்கொண்டால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் துலாம் ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குரு உதயமாவதால் கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













